வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (29/10/2018)

கடைசி தொடர்பு:21:20 (29/10/2018)

வாட்ஸ்அப்பிலும் இனி ஸ்டிக்கர்ஸ் அனுப்பலாம்! வருகிறது புதிய வசதி #Update

சாட்டிங்கின்போது மக்கள் தங்கள் உணர்வுகளை இன்னும் எளிதாகத் தெரிவிக்கும் வகையில் ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது வாட்ஸ்அப். இது மட்டுமல்லாமல் மற்ற தெர்ட் பார்ட்டி ஸ்டிக்கர்களையும் அனுப்ப வழிவகை செய்துள்ளனராம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என இரண்டிலும் இந்த அப்டேட் வருமாம்.

இதைப் பற்றி தங்களது blog போஸ்ட் ஒன்றில் தெரிவித்துள்ளது. அதில், ``எமோஜி, கேமரா வசதிகள், ஸ்டேட்டஸ், அனிமேட்டட் GIF எனத் தொடர்ந்து புதிய வசதிகளை நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் தொடர்புகொள்ள அறிமுகப்படுத்திவருகிறோம். அதில் புதிதாக ஸ்டிக்கர்ஸ் வசதியையும் சேர்கிறது. இதன் மூலம் வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வுகளை இன்னும் எளிமையாகப் பகிரலாம்" என்றது வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப்

இதை எளிதாகப் பயன்படுத்த வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கருக்கென தனியாகப் பட்டன் ஒன்று இருக்குமாம். அங்கு இருக்கும் ப்ளஸ் பட்டனை கிளிக் செய்து புதிய ஸ்டிக்கர் பேக்குகளையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். ஃபேஸ்புக் மெசேன்ஜேர் போன்ற செயலிகளில் ஏற்கெனவே இருப்பது போல்தான் வாட்ஸ்அப்பிலும் இதைப் பயன்படுத்த முடியும்.  

வாட்ஸ்அப்பின் வெர்ஷன் 2.18.329-ல் ஆண்ட்ராய்டுக்கும், 2.18.100-ல் ஐஓஎஸ்-க்கும் இந்த வசதி கிடைக்குமாம். வாட்ஸ்அப் வெப் வெர்ஷனிலும் இது கிடைக்குமாம். இந்த அப்டேட் வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கத் தொடங்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க