வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:17:30 (01/11/2018)

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வருகிறது விளம்பரம்!

வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸ் பிரிவில் விரைவில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் என அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

வாட்ஸ் அப்

சமூக வலைதளமான யூடியூபில் பணம் ஈட்டும் முயற்சியாக முதலில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. ஒரு நிமிடத்துக்கு அதிகமாக உள்ள வீடியோக்களில் ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகும். அதுவே நேரம் அதிகம் உள்ள வீடியோக்களில் மூன்றுக்கும் மேற்பட்ட விளம்பரங்கள் ஒளிபரப்பாகும். இதையடுத்து ஃபேஸ்புக்கில் உள்ள வீடியோக்களுக்கும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. 

முன்னதாக இதே விளம்பரங்களை வாட்ஸ் அப்பிலும் ஒளிபரப்ப திட்டமிடப்படுவதாக சில தகவல்கள் உலாவந்தன. தற்போது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பிரிவிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப உள்ளதாக நேற்று அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் கிறிஸ் டேனியல் உறுதிசெய்துள்ளார். உலகம் முழுவதும் 1.5 பில்லியன் மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் 250 மில்லியன் பேர் வாட்ஸ் அப் உபயோகிக்கின்றனர். அதன் ஸ்டேட்டஸ் பிரிவில் புகைப்படங்கள், ஜிஃப், வீடியோ ஆகியவற்றைப் பதிவு செய்தால் 24 மணிநேரம் வரை பார்க்கலாம். தற்போது இதற்கு இடையே ஒரு விளம்பரம் மட்டும் ஒளிபரப்பாகும். பயனர்கள் ஃபேஸ்புக்கின் விளம்பர அமைப்பு மூலம் விளம்பரங்களைப் பெற முடியும் என்றும் இதன் மூலம் வணிக ரீதியான வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் வாட்ஸ் அப் நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.