தடையால் யூ - டியூபில் அதிகரிக்கும் ஆபாசத் தேடல்கள்..! - கூகுள் ட்ரெண்ட்ஸ் ரிப்போர்ட் | Youtube sees more porn related searches after porn ban.

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:01:00 (02/11/2018)

தடையால் யூ - டியூபில் அதிகரிக்கும் ஆபாசத் தேடல்கள்..! - கூகுள் ட்ரெண்ட்ஸ் ரிப்போர்ட்

சமீபத்தில்தான் முக்கிய தொலைத்தொடர்பு மற்றும் இணையதள சேவை நிறுவனங்கள், நாடு முழுவதும் ஆபாச இணையதளங்களைத் தடைசெய்திருந்தது. இதன் காரணமாக, நெட்டிசன்கள் யூடியூப் பக்கம் திரும்பியுள்ளதாக கூகுள் ட்ரெண்ட்ஸ் மூலம் தெரியவந்துள்ளது. 

யூடியூப்

உலகின் மிகமுக்கியமான வீடியோ தளமாகப் பார்க்கப்படுவது யூடியூப் தான். ஆனாலும், தவறான மற்றும் ஆபாசம் கொண்ட வீடியோக்களை அனுமதிக்காது அது. இருப்பினும், இந்தத் தடைக்குப் பிறகு மக்கள் பிரபல ஆபாசத் தளங்களின் பெயர்கள் மற்றும் கீவேர்டுகளை அதிகமாக யூடியூபில் தேடியதாக கூகுள் ட்ரெண்ட்ஸ் மூலம் கண்காணித்ததில் தெரியவந்துள்ளது. ஆபாசம் சம்பந்தமான தேடல்கள் அக்டோபர் 20-க்குப் பிறகு கிட்டத்தட்ட 200 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதுதான் ஜியோ ஆபாச தளங்களைத் தடை செய்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காலத்தில், ஆபாச இணையதளங்களின் பெயர்களைக் கொண்ட தேடல்கள் இதைவிடவும் அதிக சதவிகிதம் உயர்ந்துள்ளன.

VPN PROXY

ஆனால், யூடியூபும் இதைப்போன்ற வீடியோக்களை உடனே எடுக்கும் அளவு வேகமாகச் செயல்படாது. எனவே, இந்தத் தடையால்  அவர்கள் ஓவர்டைம் வேலைபார்க்க வேண்டியதிருக்கும். இதுதவிர, மாற்று வழிகளான VPN மற்றும் Proxy தொடர்பான தேடல்களும் கூகுள் சர்ச்சில் அதிகரித்துள்ளன. இதனால், வெறும் தடையினால் மட்டும் எதையும் மாற்றிவிடமுடியாது என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க