`பிரைவேட் ரிப்ளை' - வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி | WhatsApp will introduce new private reply feature very soon

வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (02/11/2018)

கடைசி தொடர்பு:09:25 (02/11/2018)

`பிரைவேட் ரிப்ளை' - வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி

வாட்ஸ்அப்

ஸ்மார்ட்போன்களில் முதன்மையான மெசேஜிங் ஆப்பாக பயன்படுத்தப்படுவது வாட்ஸ்அப். இதன் பயன்படுத்தும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகப் பல புதிய வசதிகள் அவ்வப்போது சேர்க்கப்படுகின்றன. அப்படி 'பிரைவேட் ரிப்ளை' (Private Reply) என்ற வசதி மிக விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த வசதி தற்பொழுது வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது ஒரு குரூப்பில் ஒரு மெசேஜுக்கு பதில் அனுப்பும்போது அதை அந்த குரூப்பில் உள்ள அனைவருமே பார்க்க முடியும். ஆனால், பிரைவேட் ரிப்ளை மூலமாகக் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் ரிப்ளை செய்ய முடியும். குரூப்பில் உள்ள மற்றவர்கள் யாரும் அந்த மெசேஜைப் பார்க்க முடியாது. கடந்த வருடம் பிரைவேட் ரிப்ளை வசதி பரிசோதனை நிலையில் இருக்கும்போது தவறுதலாக வெளியானது. அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து தற்பொழுது பீட்டா பயனாளர்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த வசதி இன்னும் சில நாள்களில் அனைத்து வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் கிடைக்கும். மேலும், இது தவிர்த்து கூடிய விரைவில் வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் காட்டப்படும் என்ற தகவலும் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.