வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (05/11/2018)

கடைசி தொடர்பு:10:42 (05/11/2018)

#TechTamizha: ஸ்க்ரீன்ஷாட் ஆதாரங்கள் சட்டப்படி செல்லுமா? - நவம்பர் இதழ்

ணக்கம் வாசகர்களே!

நவம்பர் மாத டெக் தமிழா தயார். காலத்திற்கேற்ப குற்றங்களும், அதன் தன்மையும் மாறிக்கொண்டே இருப்பது போல, அதற்கான ஆதாரங்களும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. சில ஆண்டுகள் முன்புவரைக்கும் குற்றவாளிகளின் நேரடித் தடயங்கள் மட்டும்தான் குற்றவழக்கில் ஆதாரங்களாக இருந்தன. இன்று, குற்றவாளிகளின் ஃபிட் பேண்டில் இருக்கும் டேட்டா கூட, காவல்துறை விசாரணைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் மட்டுமே நடைமுறையில் இருந்த இந்த அம்சம் தற்போது நம் நாட்டிலும் வளர்ந்துவருகிறது. நீதிமன்றங்கள் டிஜிட்டல் ஆதாரங்களையும் கணக்கில்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. சமீபத்தில் இந்தியாவில் நிலைகொண்டிருக்கும் #MeToo புயலிலும் இந்த அம்சத்தைப் பார்க்கமுடியும். #MeToo மூலம் குற்றஞ்சாட்டும் பெரும்பாலான பெண்கள் தங்களுடைய பழைய ஸ்க்ரீன்ஷாட்களைத்தான் ஆதாரமாக முன்வைக்கின்றனர். இதுபோன்றவை சமூகத்தின் பார்வையில் ஆதாரமாகக் கருதப்பட்டாலும், சட்டத்தின் பார்வையில் இது ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படுமா, டிஜிட்டல் ஆதாரங்களை நம் நீதிமன்றங்கள் எப்படிக் கையாள்கின்றன, சட்ட நுணுக்கங்களுடன் விவரிக்கிறது வழக்கறிஞர் சத்தியநாராயணாவின் நேர்காணல். 

வழக்கம்போல இந்த ஆண்டும் பெரும் எதிர்பார்ப்புடனும், பரபரப்புடனும் நடந்து முடிந்திருக்கிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே. இவ்வளவு பெரிய நிகழ்வை ஃப்ளிப்கார்ட்டின் டெக்னிக்கல் டீம் எப்படிச் சமாளிக்கிறது? விரிவான கட்டுரை உள்ளே.

கொஞ்சமே கொஞ்சம் விசேஷ அப்டேட்களுடன் வந்தாலும், இன்னும் தான் ஃபிளாக்ஷிப் கில்லர்தான் என்பதை இன்னுமொருமுறை அழுத்தமாக நிரூபித்திருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம். ஒன்ப்ளஸ் 6T அப்டேட்ஸ் எப்படி இருக்கிறது என்பது போன்ற இன்னும் நிறைய சுவாரஸ்யமான கட்டுரைகள் டெக் தமிழாவில் காத்திருக்கின்றன. 

டெக் தமிழா நவம்பர் 2018

http://bit.ly/2NwiUv3 - இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள்.

இதுவரைக்கும் இதழை நேரடியாக லிங்க் மூலம் டிரைவிலிருந்து டவுன்லோடு செய்து படித்துவந்தீர்கள். ஆனால், இனிமேல் நேரடியாக விகடன் ஆப்பிலேயே படிக்கலாம். http://bit.ly/2NwiUv3 இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து, பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் 'டெக் தமிழா' இதழ் இடம்பெற்றிருக்கும். அதை க்ளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படித்துக்கொள்ளலாம். இதேபோல முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் டவுன்லோடு செய்து படித்துக்கொள்ளலாம்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க