`செய்திகள் வாசிப்பது செயற்கை நுண்ணறிவு!’ - சீனாவின் AI ஆங்கர் | Artificial Intelligence News reader introduced in china

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/11/2018)

கடைசி தொடர்பு:18:00 (09/11/2018)

`செய்திகள் வாசிப்பது செயற்கை நுண்ணறிவு!’ - சீனாவின் AI ஆங்கர்

தொலைக்காட்சிகளில் செய்தி வசிப்பதே ஒரு கலைதான், அதற்கென்றே இத்தனை வருடங்களில் பலரும் பெயர்பெற்றுள்ளனர். ஆனால், இந்தத் துறையிலும் மனிதர்கள் செய்வதை தொழில்நுட்பத்தால் செய்ய முடியும் என்று செயற்கை நுண்ணறிவு மூலம் நிரூபித்துள்ளது சீனாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம். 

செயற்கை நுண்ணறிவு

Xinhua என்னும் அந்நிறுவனம் ஒரு மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட இதைச் சீன தேடுதல் இன்ஜின் நிறுவனமான Sogou வடிவமைத்துள்ளது. செயற்கை செய்தி வாசிப்பாளரின் உடல்மொழி தொடங்கி உதடு அசைவுகள், குரல் வரை அனைத்துமே ஏற்கெனவே இருக்கும் செய்தி வாசிப்பாளர்களை ஆராய்ந்து அதை வைத்துத் தானாக உருவகப்படுத்தப்படுகிறது. செய்திகளை டைப் செய்துகொடுத்தால் போதும் செய்தி வாசிக்கும் வீடியோ கிடைத்துவிடும். ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் பேசும்வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாகப் பார்த்தால் எது செயற்கை செய்தி வாசிப்பாளர், எது நிஜ செய்தி வாசிப்பாளர் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும் வகையில் துல்லியமாக உள்ளது இது எனப் பலரும் பாராட்டிவருகின்றனர்.

இருப்பினும் இன்னும் எதோ ஒன்று இதனிடம் செயற்கையாக இருக்கிறது, ரோபோவின் குணாதிசயங்கள் இதில் தென்படுகிறது என்று வல்லுநர்கள் கூறிவருகின்றனர். மற்றும் சிலர் என்ன இருந்தாலும் ஒரு நம்பகமான பிரபலமடைந்த செய்தி வாசிப்பாளர்போல் இதனால் என்றும் ஆகிவிட முடியாது எனத் தெரிவித்துவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க