`அட அது நாங்களே இல்லப்பா!'- ட்விட்டர் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்ராக்கர்ஸ்  | We are not on any socialmedia platforms says Tamilrockers

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (10/11/2018)

கடைசி தொடர்பு:12:00 (10/11/2018)

`அட அது நாங்களே இல்லப்பா!'- ட்விட்டர் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்ராக்கர்ஸ் 

பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்தப் படத்தை உடனே இணையத்தில் ரிலீஸ் செய்துவிடுவோம் என்று ட்விட்டரில் தமிழ்ராக்கர்ஸ் சாவல் விட்டுவிட்டதாகச் செய்திகள் வரும். மீம் பக்கங்கள் தொடங்கி செய்தி ஊடகங்கள் வரை இது உடனே வைரல் ஆகிவிடும். இதேபோன்று விஜய்யின் `சர்கார்' திரைப்படமும் வெளியாகும் அன்றே HD தரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டது. உடனே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பெரிய செய்தியாக மாறிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 'எங்களுக்கு ட்விட்டர்ல அக்கவுண்டே கிடையாதே பாஸ்!' என்று தங்கள் தளத்தில் அறிவித்துள்ளது தமிழ்ராக்கர்ஸ்.

தமிழ்ராக்கர்ஸ்

'நங்கள் ட்விட்டர் உட்பட எந்த ஒரு சமூகவலைதளங்களிலும் இல்லை, எங்கள் பெயரை பயன்படுத்திப் பதிவிடப்படும் எதுவும் உண்மை கிடையாது. அவற்றில் வரும் தகவல்களை நம்பாமலும், பரப்பாமலும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று தங்கள் பக்கத்தின் முகப்பில் கூறியுள்ளது அந்த தளம். நேற்று கூட ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள 2.0 திரைப்படம் விரைவில் தங்கள் தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் பதியப்பட்டு பெரிய செய்தி ஆனது. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது தமிழ்ராக்கர்ஸ் தளத்தின் இந்த விளக்கம். இனிமேலாவது அந்தப் படத்தை வெளியிடப் போகிறார்களாம், சொன்னதை அப்படியே செஞ்சுட்டாங்க போன்ற வதந்திகள் மற்றும் மீம்ஸ்களை நம்பாமல் இருப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க