``வாக்குரிமை ஏன் முக்கியம்?’’ - இந்தியா வந்த ட்விட்டர் CEO-வின் மெசேஜ் #PowerOf18 | TWITTER CEO JACK DORSEY TO TALK ABOUT POWER OF VOTE IN INDIA

வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (12/11/2018)

கடைசி தொடர்பு:15:16 (12/11/2018)

``வாக்குரிமை ஏன் முக்கியம்?’’ - இந்தியா வந்த ட்விட்டர் CEO-வின் மெசேஜ் #PowerOf18

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (C.E.O) ஜாக் டோர்சி நவம்பர் 9 இந்தியா வந்தார். அவரின் முதல் இந்தியப் பயணம் இது. இந்தப் பயணத்தின் முக்கிய பகுதியாக இன்று டெல்லி ஐ.ஐ.டி-யில் மாணவர்களிடையே உரையாற்றினார் அவர். அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் மாணவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது, ஓட்டுரிமையின் மதிப்பு என்ன, போலிச் செய்திகளைத் தடுப்பது எப்படி, தான் C.E.O ஆன கதை போன்ற பல விஷயங்கள் பற்றி மாணவர்களுடன் அவர் விவாதித்தார். இது தொடர்பான ட்விட்டரின் முன்னெடுப்பு ஒன்றையும் அங்கு அறிமுகப்படுத்தினார். இது தொடர்பான கேள்விகளை ட்விட்டரில் #PowerOf18 என்ற ஹேஷ்டேக்குடன் மக்கள் அவரிடம் கேட்டனர். இது ஓட்டுரிமையின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் மற்றும் மக்களிடையே எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஹேஷ்டேக். இது குறித்து வீடியோ ஒன்றைக்கூட வெளியிட்டிருந்தது ட்விட்டர் இந்தியா பக்கம்.

ட்விட்டர்

 

கடந்த சனிக்கிழமை தலாய் லாமாவை சந்தித்து வந்த அவர் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துள்ளார். மேலும், தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்தையும் சந்தித்து ட்விட்டரில் பரவும் தவறான ஆபத்தான விஷயங்களைத் தடுப்பதை பற்றியும் தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் ட்விட்டர் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் விவாதிக்கவுள்ளார் ஜாக் டோர்சி. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close