வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (13/11/2018)

கடைசி தொடர்பு:07:45 (13/11/2018)

``அடுத்த வருடம் நிச்சயம் வெளியிடுவோம்" - ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் குறித்து சாம்சங்

சாம்சங்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மடக்கும் திரை கொண்ட ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் கடந்த சில நாள்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்தியது. இதை ஒரே நேரத்தில் டேப்லட் போன்றும் பாதியாக மடக்கி கைக்கு அடக்கமாக ஸ்மார்ட்போன் போன்றும் பயன்படுத்தலாம். தயாரிப்பு நிலையின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் எப்பொழுது வெளியாகும் என்ற ஆவல் அனைவருக்கும் எழுந்துள்ளது. என்னால் தேதியை உறுதிப்படுத்த முடியாது, ஆனால் அடுத்த வருடப் பாதிக்குள் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிடுவோம்" என்று செய்தியாளர் சந்திப்பில் சாம்சங் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் பிரிவின் தலைமை அதிகாரி டாங்-ஜின் கோ (Dong-Jin Koh) தெரிவித்திருக்கிறார்.

 ஃ போல்டபிள் ஸ்மார்ட்போன்

வழக்கமான ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் போலவே முதலில் இதுவும் 1 மில்லியன் என்ற அளவில் தயாரிக்கப்படும். சந்தையில் வரவேற்பைப் பெரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். சாம்சங் அண்மையில் மேடையில் அறிமுகப்படுத்தியது ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் என்றாலும் இதன் வடிவமைப்பு இறுதி செய்யப்படவில்லை. எனவே, இது தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை. இது இறுதி வடிவம் பெற்று வெளியாகும்போது ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.