வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (13/11/2018)

கடைசி தொடர்பு:07:01 (13/11/2018)

சாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது!

சாம்சங்

இப்பொழுது வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா என்ற விஷயம் பரவலான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், கடந்த மாதம் நான்கு கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது சாம்சங். உலகின் முதல் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் என்ற அடைமொழியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது. சாம்சங் கேலக்ஸி A9 (2018) என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது சாம்சங் நிறுவனம். தற்பொழுது இந்த மாதம் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 கேலக்ஸி A9 

8 மெகாபிக்ஸல் திறன் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 10 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ், 24 MP மெயின் கேமரா மற்றும் டெப்த் எஃபெக்டுக்காக 5MP கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கின்றன. இதன் 6 GB ரேம் மற்றும் 128 GB இன்டர்னல் மெமரி வேரியன்ட் விலை 39,000 ரூபாயாக நிர்ணயிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அண்மையில் வெளியாகிப் பல தரப்பினரிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இருக்கும்.