வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (15/11/2018)

கடைசி தொடர்பு:17:40 (15/11/2018)

இந்தியா வந்த அமேசானின் ஆடியோ புத்தக சேவை! #Audible

ஆடியோ புத்தகங்களின் மிகப்பெரிய விற்பனையாளரும், தயாரிப்பாளருமான 'ஆடிபிள்', இறுதியாகத் தங்கள் சேவையை இந்தியாவிலும் வழங்க உள்ளது. இதில் 2 லட்சம் ஆடியோ புத்தகங்களும் சிறப்பு நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. மேலும், இந்த ஆடியோ புத்தக சேவையில் புதிதாக 400 இந்திய எழுத்தாளர்களின் பிரத்தியேக ஆடியோ புத்தகங்களும் கிடைக்கும். இந்த ஆடியோ புத்தகங்கள் சில வற்றுக்கு, ராதிகா  ஆப்தே போன்ற பிரபல நடிகர்கள் குரல்கொடுத்துள்ளனர்.

ஆடியோ புத்தகசேவை

அமேசானின் சேவையான இது, ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு 90 நாள்கள் வரை இலவசமாகக் கிடைக்கும். மற்றவர்களுக்கு 30 நாள்கள் இலவசமாகக் கிடைக்கும். இந்தக் காலத்தில், நீங்கள் தேர்வுசெய்யும் முதல் ஆடியோ புத்தகம் இலவசமாகக் கிடைக்கும். அதன் பின் மாதம் 199  செலுத்தி, இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். மாதம் 1 கிரெடிட் உங்களுக்குக் கொடுக்கப்படும். அதை வைத்து எந்த ஒரு புத்தகத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மற்ற புத்தகங்களிலும் 30 சதவிகித சலுகை கிடைக்கும். இந்த மெம்பெர்ஷிப் பெறாதவர்களும் புத்தகங்களை முழு விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.

இந்தியப் படைப்புகள் என்றில்லாமல், ஜேகே ரௌலிங், அகதா கிறிஸ்டி, டன் பிரவுன், ராபின் சர்மா என உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளும் இதில் கிடைக்கும். 

"இந்தியாவின் இலக்கியப் பாரம்பர்யம் மற்றும் தனித்துவம் பெருமைமிக்கது. துடிப்பான எழுத்துகளைப் புத்தகங்களாகப் படிக்காமல் ஆடியோவாகக் கேட்க விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களிடம்  இந்தச் சேவையைக் கொண்டுசேர்ப்பதே Audible.in தளத்தின் நோக்கம்" என்று அறிமுக விழாவில் கூறினார் இதன் நிறுவனரும் CEO-வுமான டான் கட்ஸ். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க