இன்ஸ்டாகிராம் வசதியில் கோளாறு? - பாஸ்வேர்டை மாற்றச் சொல்லும் நிறுவனம்! | Instagram accidentally leaks passwords of some users

வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (19/11/2018)

கடைசி தொடர்பு:19:31 (19/11/2018)

இன்ஸ்டாகிராம் வசதியில் கோளாறு? - பாஸ்வேர்டை மாற்றச் சொல்லும் நிறுவனம்!

கடந்த அக்டோபரில்தான் ஃபேஸ்புக்கில் இருந்த ஒரு சிறிய கோளாறால் கிட்டத்தட்ட 5 கோடி மக்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாயின. அதைத் தொடர்ந்து இப்போது இன்ஸ்டாகிராம் தளத்திலும் ஒரு கோளாறு இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தங்களது பாஸ்வேர்டுகள் கசிந்திருக்கலாம் என சில பயன்பாட்டாளர்களை எச்சரித்துள்ளது இன்ஸ்டாகிராம்.

இன்ஸ்டாகிராம்

இந்தக் கோளாறு இன்ஸ்டாகிராம் தளத்தில் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 'Download Your Data' வசதியில் இருந்திருக்கிறது. பயன்பாட்டாளர்கள் தாங்கள் இதுவரை பதிவுசெய்திருக்கும் டேட்டா அனைத்தையும் பதிவிறக்கம் செய்ய இந்த வசதி உதவும். பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு கேட்கும் இந்த வசதி, அந்த பாஸ்வேர்டை உங்களின் பிரௌசரில் வரும் URL லிங்க்கில் சேர்த்து டிஸ்ப்ளே செய்திருக்கிறது.

Bug

ஆனால், இதைத் தவிர எங்கும் இந்தத் தகவல்கள் கசியவில்லை என்றும், இதை இப்போது சரிசெய்துவிட்டதாகவும் அறிவித்துள்ளது இன்ஸ்டாகிராம். இருப்பினும் இதனால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கும் கணக்குகளின் பாஸ்வேர்டை மாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது அந்நிறுவனம். 

மேலும், இன்ஸ்டாகிராமைப் பெரும்பாலான மக்கள் செயலியில்தான் பயன்படுத்திவருகின்றனர் என்பதால், பெரிதான பாதிப்பு இருக்காது என்று கருதப்படுகிறது. இதற்கிடையில் கடந்த மாதம்தான் மேலும் சில புதிய வசதிகளை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்றாக ஒரு நாளில் எவ்வளவு நேரம் அவர்கள் தளத்தில் நீங்கள் செலவழிக்கிறீர்கள் என்பதை இனி பார்க்கமுடியும். அளவுக்கு அதிகமான நேரம் செலவழித்தால் அலெர்ட் வரும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close