வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (19/11/2018)

கடைசி தொடர்பு:22:40 (19/11/2018)

வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ஆப்களுக்குத் தடைபோடும் ஆப்பிள்... ஏன்?

ன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப் சமீபத்தில்தான் ஸ்டிக்கர் வசதியை அறிமுகப்படுத்தியது. எமோஜி மற்றும் GIF-களை மட்டுமே மெசேஜிங்கிற்குப் பயன்படுத்திக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இது புது அனுபவம் தரவே உடனே வைரலானது. வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்கள் அனுப்ப வேண்டுமானால், எமோஜி போல உடனே அனுப்பிவிட முடியாது. அதற்காக பிரத்யேக ஆப்களை டவுன்லோடு செய்துதான் அனுப்ப வேண்டும். அல்லது வாட்ஸ்அப் Default-டாக கொடுத்திருக்கும் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதும், அல்லது வந்த ஸ்டிக்கர்களை ஃபார்வர்டு செய்வதும்தான் ஒரே வழி. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இரண்டிலும் இதேநிலைதான். இப்போது ஆண்ட்ராய்டில் எந்தப் பிரச்னையுமில்லை. ஐ.ஓ.எஸ் ஸ்டிக்கர்களுக்குத்தான் புதுசிக்கல் வந்திருக்கிறது.

வாட்ஸ்அப் ஸ்டிக்கர்

தன்னுடைய ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் வசதிகளைத் தரும் ஆப்களை நீக்கிவருகிறது ஆப்பிள். இதற்கு ஆப்பிளின் விதிமுறைகளை இந்த ஆப்கள் மீறியதுதான் காரணம். ஆப்பிளின் விதிமுறைகளின்படி, ஒரே மாதிரியான தன்மை அல்லது வடிவமைப்பு கொண்ட பல ஆப்களை தன்னுடைய ப்ளே ஸ்டோரில் அனுமதிக்காது. ஸ்டிக்கர் ஆப்களில் இதுதான் முதல் பிரச்னை. எல்லா ஆப்களும் ஒரே மாதிரி தன்மை கொண்டவை என்பதால் சிக்கல் எழுந்திருக்கிறது. இதேபோல ஆப் ஸ்டோரில் இருக்கும் எந்தவொரு ஆப்பும் இன்னொரு ஆப்பை வலுக்கட்டாயமாக இன்ஸ்டால் செய்யச் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அது விதிமீறல். வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ஆப்களைப் பொறுத்தவரை அதைப் பயன்படுத்த நிச்சயம் வாட்ஸ்அப் தேவை. அதை இன்ஸ்டால் செய்தாக வேண்டும். இந்த லாஜிக்கும் இப்போது பிரச்னை ஆகியிருக்கிறது. இந்தப் பிரச்னை குறித்து வாட்ஸ்அப் இதுவரைக்கும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இப்போதைக்கு வாட்ஸ்அப்பிற்கு ஒரேவழி, டெலிகிராம், ஹைக் போல ஆப்பிற்குள்ளேயே ஸ்டிக்கர்களைக் கொடுப்பதுதான். அப்போது வேறு ஆப்களுக்குத் தேவையில்லாமல் போகும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க