ஃபேஸ்புக் தலைமையிலிருந்து விலகுவதைப் பற்றி மார்க் சக்கர்பெர்க் பதில்! | Mark Zuckerberg answers questions on resignation

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (21/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (21/11/2018)

ஃபேஸ்புக் தலைமையிலிருந்து விலகுவதைப் பற்றி மார்க் சக்கர்பெர்க் பதில்!

பங்குதாரர்கள் அளிக்கும் அழுத்தத்தால் பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத் தலைவரும் CEO-வுமான மார்க் சக்கர்பெர்க் தலைவர் பதவியிலிருந்து விலகலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. கடந்த வாரம் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், `எப்படி ஃபேஸ்புக் நிறுவனம் தன் மீது சுமத்தப்படும் பழிகளைத் திசைதிருப்ப குடியரசுக் கட்சிக்குச் சொந்தமான அரசியல் ஆலோசனை மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனத்துக்குப் பணம் கொடுத்து போட்டி நிறுவனங்களைப் பற்றி அவதூறு பரப்பியது' என்பதைப் பற்றி கூறப்பட்டிருந்தது. இன்னும் பல சர்ச்சைகளிலும் சமீபத்தில் சிக்கியுள்ளது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக்

இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளிக்கையில் தலைமையிலிருந்து விலகுவது பற்றி மார்க்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ``இப்போது இதைப்பற்றி யோசிப்பது அர்த்தமற்றதாக உள்ளது" எனக் கூறியுள்ளார் அவர். மேலும், இந்த சர்ச்சைகளில் முக்கியமாக இடம்பெற்ற பெயர்களில் ஒன்றான சி.ஓ.ஓ ஷெரில் சண்ட்பெர்க்கின் பதவியைப் பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு அந்நிறுவனத்துக்காக அவர் செய்துள்ள பணிகளை மதிப்பதாகவும், இப்போது இருக்கும் பல பிரச்னைகளையும் அவர்தான் தீர்க்க முயன்றுவருவதாகவும், எனவே, மேலும் பல ஆண்டுகள் சேர்ந்தே பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார் மார்க். இதன்மூலம் இப்போதைய சூழலில்தான் பதவி விலக வாய்ப்பில்லை என்பதைத் திட்டவட்டமாக உலகத்துக்குத் தெரிவித்துள்ளார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க