வெளியிடப்பட்ட நேரம்: 08:53 (28/11/2018)

கடைசி தொடர்பு:10:26 (28/11/2018)

ஃப்ளிப்கார்ட்டின் 'கிராண்ட் கேட்ஜெட் டேஸ்'... மிஸ் பண்ணக்கூடாத கேட்ஜெட்ஸ் இதோ!

ஃப்ளிப்கார்ட்டின் 'கிராண்ட் கேட்ஜெட் டேஸ்'... மிஸ் பண்ணக்கூடாத கேட்ஜெட்ஸ் இதோ!

ஸ்மார்ட்போனோ, அல்லது வேறு கேட்ஜெட்டோ நேரில் போய் வாங்குபவர்களைவிட ஆன்லைனில் வாங்குபவர்கள் இன்றைக்கு அதிக அளவில் இருக்கிறார்கள். வெளியில் அலைந்து திரிந்து வாங்குவதை விடவும் இணையத்தில் வாங்குவது என்பது எளிதாக இருக்கிறது. அவர்களுக்கேற்றவாறு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மாதம் தவறாமல் ஏதாவது ஒரு சிறப்பு விற்பனையை அறிவித்து விடுகின்றன. அப்படி கேட்ஜெட் விரும்பிகளுக்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 'கிராண்ட் கேட்ஜெட் டேஸ்' என்ற சிறப்பு விற்பனையை அறிவித்திருக்கிறது. இந்த சேல் முழுவதும் கேட்ஜெட்களுக்கானதுதான். நேற்றைக்குத் தொடங்கிய இந்த விற்பனை நாளை வரை நடக்கவிருக்கிறது. இதில் சில கேட்ஜெட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். எனவே, கேட்ஜெட் விரும்பிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஃப்ளிப்கார்ட்டின் 'கிராண்ட் கேட்ஜெட் டேஸில் கிடைக்கும் சில ஆஃபர்கள் இவை...

 லேப்டாப் 

ஃப்ளிப்கார்ட் டீல்

லேப்டாப்களின் விலை 12,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. iBall CompBook M500 மாடல் லேப்டாப் 12,999 ரூபாய்க்குக் கிடைக்கும். 4 GB ரேம் மற்றும் 32 GB EMMC ஸ்டோரேஜ் கொண்ட இது குறைந்த அளவு தேவை உள்ளவர்களுக்குச் சிறந்த தேர்வாக இருக்கும். Dell Vostro 15 3000 Core i3 6th Gen மாடல் லேப்டாப் 25,990 ரூபாய்க்குக் கிடைக்கிறது. HP 15q Pentium Quad Core மாடல் லேப்டாப் 21,490 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

ஹார்ட்டிஸ்க்

 1 TB அளவு கொண்ட எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்க்குகளின் விலை 3,399 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. Toshiba Canvio Ready 1 TB மாடல் ஹார்ட்டிஸ்க் 3,399 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அடுத்ததாக Sony 1 TB ஹார்ட்டிஸ்க் 3,699 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 2 TB அளவு கொண்ட WD My Passport மாடல் ஹார்ட்டிஸ்க் 5,199 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 

டிஜிட்டல் கேமரா 

டிஜிட்டல் கேமரா 

டிஜிட்டல் கேமராவைப் பொறுத்தவரையில் குறைவான விலை கொண்ட கேமராக்களுக்கு எந்த ஆஃபர்களும் கொடுக்கப்படவில்லை. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விலை கொண்ட மாடல்களின் விலை மட்டும் சிறிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. Canon M50 மிரர்லெஸ் கேமரா EF-M 15-45 mm சிங்கிள் லென்சுடன் 53,990 ரூபாய்க்குக் கிடைக்கும்.

டேப்லெட் 

ஸ்மார்ட்போனைவிட சற்று பெரிய டிஸ்ப்ளேவை விரும்புபவர்களுக்கு டேப்லெட்தான் ஏற்ற கேட்ஜெட்டாக இருக்கும். Alcatel A3 டேப்லெட் 8,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதில் ஒரு சிம் கார்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம் கூடுதலாக 4G VOLTE வசதியும் இருக்கிறது. 

பவர்பேங்க் 

பவர்பேங்க் 

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே பவர்பேங்க் என்பது தேவைப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. 10400 mAh திறன் கொண்ட Lenovo பவர்பேங்க் 699 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இது பெரும்பாலும் 799 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுவது வழக்கம். Intex 11000 mAh பவர்பேங்க் 599 ரூபாய்க்குக் கிடைக்கிறது. Flipkart SmartBuy 15000 mAh பவர்பேங்க் 799 ரூபாய்க்குக் கிடைக்கிறது. Flipkart SmartBuy 20000 mAh பவர்பேங்க் 1,149 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதிக திறன் கொண்ட பவர்பேங்க் தேவைப்படுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இவை மட்டுமின்றி இயர்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர், பிரிண்டர்கள் என வேறு சில கேட்ஜெட்களும் ஆஃபர்கள் விலையில் கிடைக்கின்றன. மேலும் HDFC கிரெடிட் கார்டு மூலமாகப் பணம் செலுத்தினால் 5% இன்ஸ்டன்ட் கேஷ்பேக்கும் கிடைக்கும். 


டிரெண்டிங் @ விகடன்