`பயணத்தின்போது லைவ் லொக்கேஷன் ஷேர் செய்யலாம்!’ - கூகுள் மேப்பில் புதிய வசதி | Live Location Feature now available in Google Maps

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (29/11/2018)

கடைசி தொடர்பு:07:50 (29/11/2018)

`பயணத்தின்போது லைவ் லொக்கேஷன் ஷேர் செய்யலாம்!’ - கூகுள் மேப்பில் புதிய வசதி

கூகுள் மேப் -லைவ் லொக்கேஷன்

 

ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் மேப் என்றாலே கூகுள் மேப்தான் என்றாகிவிட்டது. கூகுள் மேப் மூலமாக வழி கண்டுபிடிப்பது, அருகில் உள்ள உணவகங்களைத் தேடுவது, பேருந்து மற்றும் ரயில் வரும் நேரங்களை அறிந்துகொள்வது என பல்வேறு வசதிகளை பயன்படுத்த முடிகிறது. இது தவிர அவ்வப்போது மேப்பில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது கூகுள். அந்த வகையில் தற்பொழுது கூடுதலாகப் பஸ் மற்றும் ரயிலில் பயணம் செய்யும்போது லைவ் லொக்கேஷனை ஷேரிங் செய்யும் வசதி கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருக்கும் லொக்கேஷன் ஷேரிங் பகுதியிலேயே இது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நண்பர்களோ, உறவினர்களோ ஒருவர் பயணம் செய்யும் பஸ் அல்லது ரயில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும், அது குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். இந்த விவரத்தை வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மெசெஞ்சர் ஆகியவற்றிலும் ஷேர் செய்துகொள்ளலாம். கூகுள் மேப் ஆப்பை புதிய பதிப்புக்கு அப்டேட் செய்வதன் மூலமாக இந்த வசதியைப் பெற முடியும். தற்பொழுது ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு மட்டும் இந்த லைவ் லொக்கேஷன் ஷேரிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஐ.ஒ.எஸ்(IOS) இயங்குதளத்துக்கான கூகுள் மேப்பிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


[X] Close

[X] Close