ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் - சாம்சங்கைத் தொடர்ந்து ஓப்போ -வும் அசத்தல் | OPPO foldable smartphone will be launch in next year

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (01/12/2018)

கடைசி தொடர்பு:07:43 (01/12/2018)

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் - சாம்சங்கைத் தொடர்ந்து ஓப்போ -வும் அசத்தல்

சாம்சங் நிறுவனத்தைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனமும் மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓப்போ

மடக்கும் டிஸ்ப்ளேவைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் முயற்சியில் மொபைல் நிறுவனங்கள் பல வருடங்களாக ஈடுபட்டு வருகின்றன. அதில் சில நிறுவனங்கள் வெற்றியும் அடைந்திருக்கின்றன. அதில் சாம்சங் நிறுவனம் முன்னிலையில் இருக்கிறது. அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் மாதிரி ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனை ஒரே நேரத்தில் டேப்லெட்டாகவும் அதை மடக்கினால் ஸ்மார்ட்போனாகவும் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சாம்சங்கைத் தொடர்ந்து ஓப்போ நிறுவனமும் அடுத்த வருடத்தில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன் மாதிரி புகைப்படங்களும் இணையத்தில் தற்பொழுது வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நடக்கவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 என்ற நிகழ்வில் ஒப்போவின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூடுதலாக 5G வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றையும் ஒப்போ உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுவும் வரும் வருடத்தில் நிச்சயமாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


[X] Close

[X] Close