வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (03/12/2018)

கடைசி தொடர்பு:16:20 (03/12/2018)

₹23 ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்... ஏர்டெல்லின் புதிய திட்டம் நமக்கு லாபமா நஷ்டமா?

ஏர்டெல்

வாடிக்கையாளர்கள் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் சேவைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமானால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்யவேண்டும் என சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவெடுத்தன. அதைத் தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள், இந்தப் புதிய திட்டத்துக்கு ஏற்ப ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்தன. 

ஏர்டெல்

இதுகுறித்து சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த ட்ராய், ``இந்தப் புதிய திட்டம் குறித்து வாடிக்கையாளர்களிடம் முறைப்படி அறிவிக்க வேண்டும்; குறைந்தபட்சம் எவ்வளவு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும், ஏற்கெனவே மெயின் பேலன்ஸில் இருக்கும் தொகையிலிருந்து நேரடியாக எப்படி ரீசார்ஜ் செய்ய வேண்டும் போன்ற தகவல்களையும் முறையாகத் தெரிவிக்க வேண்டும்" என அந்நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதற்கடுத்து வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் புதிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

செல்போன்

இந்த நிலையில், ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டத்தின்கீழ் புதிதாக 23 ரூபாய்க்கு ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது ஏர்டெல். இதற்கு முன்பு குறைந்தபட்ச தொகை 35 ரூபாயாக இருந்தது. இப்போது அதற்குப் பதிலாக 23 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலே, 28 நாள்களுக்கு வேலிடிட்டி பெற்றுவிட முடியும்.

செல்போன்

இதன்மூலம் ஏற்கெனவே அக்கவுன்ட்டில் இருக்கும் மெயின் பேலன்ஸை அப்படியே தொடர்ந்து பயன்படுத்தலாம். 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 26.66 ரூபாய் டாக்டைமும், 100 MB டேட்டாவும், 28 நாள்கள் வேலிடிட்டியும் கிடைக்கும். ஆனால், 23 ரூபாய் பேக்கில் அப்படி எந்தவொரு வசதியும் இல்லை. வெறுமனே 28 நாள்கள் வேலிடிட்டி மட்டும்தான். எனவே, இது நமக்கு நஷ்டம்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க