வெளியிடப்பட்ட நேரம்: 09:56 (04/12/2018)

கடைசி தொடர்பு:09:56 (04/12/2018)

8 GB ரேம், அல்ட்ராசோனிக் ஏர் ட்ரிக்கர்... அசத்தும் அஸூஸின் கேமிங் மொபைல்! #AsusROG

கேம் பிரியர்களுக்கென பிரத்யேக மொபைல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது அஸூஸ். என்ன ஸ்பெஷல்?

8 GB ரேம், அல்ட்ராசோனிக் ஏர் ட்ரிக்கர்... அசத்தும் அஸூஸின் கேமிங் மொபைல்! #AsusROG

மொபைல் கேம் ரசிகர்களுக்காகவே ROG என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அஸுஸ் நிறுவனம். இந்நிறுவனம் சமீப காலமாக பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தீவிர மொபைல் கேம் ரசிகர்களுக்காக  ROG ஸ்மார்ட்போனை இங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் இந்த வகை கேமிங் ஸ்மார்ட்போன்கள் குறைவு என்பதால் இந்த ஸ்மார்ட்போன் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அப்படி என்ன சிறப்பு வசதிகள் இருக்கின்றன இந்த ஸ்மார்ட்போனில்?

அஸுஸின் புதிய கேமிங் மொபைல்

ROG (Republic of Gamers) என்ற பெயரே சொல்லிவிடும் இந்த ஸ்மார்ட்போன் எதற்காக உருவாக்கப்பட்டது என்று. எனவே ROG ஸ்மார்ட்போன் மற்றவற்றைப் போல வடிவமைக்கப்படவில்லை, வெளிப்புறம் உட்பட. இதன் வெளிப்புறம் முழுவதுமே வித்தியாசமான முறையில் தோற்றமளிக்கிறது. பின்புறம் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ள இடத்தின் வடிவமைப்பு பெரும்பாலும் வட்டமாக இருப்பதுதான் வழக்கம், ஆனால் இதில் வித்தியாசமாக இருக்கிறது. அஸுஸ் ஏற்கெனவே ROG என்ற பெயரில் தனியாக கேமிங்கிற்காக கிராஃபிக்ஸ் கார்டுகள், லேப்டாப், மதர்போர்டுகள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறது. அதே சீரிஸில் தற்பொழுது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனையும் வெளியிட்டுள்ளது.

ஏர் ட்ரிக்கர்கள்

பெரிய திரையில் கேம் விளையாடுபவர்கள் அதே அனுபவத்தை ஸ்மார்ட்போன்களிலும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் அதற்கேற்றவாறு வடிவமைக்கப்படுவதில்லை. அப்படி முதலில் அனைவரும் எதிர்கொள்ளும் சிக்கல் கன்ட்ரோல்கள்தான். மொபைலில் கன்ஸோல்களைப் போல கன்ட்ரோல்கள் தனித்தனியாக கொடுக்கப்படுவதில்லை. கேமிங் கன்ஸோல்களில் இருக்கும் கன்ட்ரோல்கள் மூலமாக எளிமையாக கேம் விளையாடலாம். ஆனால் ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளேவிற்குள் மட்டுமே அனைத்து கண்ட்ரோல்களும் இடம் பெற்றிருக்கும். எனவே அதைப் பயன்படுத்தி விளையாடுவது கொஞ்சம் சிரமம்தான். அதற்காக இந்த ஸ்மார்ட்போனில் ஒரு தீர்வைக் கொடுத்திருக்கிறது. இதில் இரண்டு கன்ட்ரோல்கள் வெளியே கொடுக்கப்பட்டுள்ளன. மொபைல் பேனலின் வெளிப்பக்கத்தில் இருக்கும் இரண்டு அல்டராசோனிக் ஏர் ட்ரிக்கர்கள் இதுவரை எந்த மொபைலிலும் கிடையாது என்கிறது அஸூஸ். இதன் மூலமாக டிஸ்ப்ளே கன்ட்ரோல்கள் தவிர வெளிப்புறத்திலும் கூடுதலாக இரண்டு கன்ட்ரோல்கள் கிடைக்கும். 
6.0 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இதில் இருக்கிறது, இது 90Hz திறன் கொண்டது என்பதால் காட்சிகள் தாமதம் இல்லாமல் தெரியும். மேலும் இதில் HDR வசதி இருப்பதால் கேமில் இருக்கும் கிராஃபிக்ஸ்களை முழுமையாக அனுபவிக்க முடியும். கேமிங் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மற்றொரு விஷயம் சவுண்ட். எவ்வளவுதான் சிறப்பான கேம் என்றாலும் அதற்கேற்ற ஒலி இல்லையென்றால் அது ஒரு குறைதான். எனவே சிறந்த சவுண்ட்டிங்கிற்காகவே இதில் முன்புறமாக இரண்டு ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ROG

மொபைலில் கேம் விளையாடுபவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டு அதிகமாக சூடாகிறது என்பதுதான். எனவே அதைக் குறைப்பதற்கு பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கிறது இந்நிறுவனம். உள்ளே கொடுக்கப்பட்டுள்ள carbon cooling pad, copper heat spreader மற்றும் 3D vapor-chamber என மூன்றும் மொபைலின் வெப்பத்தைக் குறைத்து கூலாக வேவைத்திருக்கும். இதுதவிர வெளியே பொருத்திக்கொள்ளும் வகையில் வேறொரு சாதனத்தையும் கூடவே தருகிறது. இதிலும் கூடுதலாக ஒரு டைப்-c போர்ட்டும், ஹெட்போன் ஜாக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 4000 mAh பேட்டரி ஃபாஸ்ட்சார்ஜிங் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறமாக 12 மெகா பிக்ஸல் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன, முன்புறமாக 8 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. Snapdragon 845 புராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது, 8GB ரேம் மற்றும்128 GB இன்டர்னெல் மெமரி இதில் இருக்கிறது.கேமிங் ஸ்மார்ட்போன் என்பதால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் விடவில்லை இந். ஒரு மொபைலைப் பொறுத்தவரையில் அதிக கிராபிக்ஸ் கொண்ட கேம்களை விளையாடத் தேவைப்படும் முழுமையான அமைப்புகளுடன் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. 69,999 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட்போன், ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கும்.


டிரெண்டிங் @ விகடன்