#Sarkar முதல் #WhistlePodu வரை... 2018-ல் ட்விட்டரின் `மரண மாஸ்' ட்ரெண்ட்ஸ்! #ThisHappened | Twitter releases 2018's top moments and hashtags

வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (05/12/2018)

கடைசி தொடர்பு:15:58 (05/12/2018)

#Sarkar முதல் #WhistlePodu வரை... 2018-ல் ட்விட்டரின் `மரண மாஸ்' ட்ரெண்ட்ஸ்! #ThisHappened

இந்த வருடம் ட்விட்டரில் இந்தியாவில் நமது தென்னிந்தியத் திரைப்படங்கள் சார்ந்த ஹேஷ்டேக்குகள்தான் அதிகம் ட்ரெண்ட் ஆகியிருக்கின்றன.

#Sarkar முதல் #WhistlePodu வரை... 2018-ல் ட்விட்டரின் `மரண மாஸ்' ட்ரெண்ட்ஸ்! #ThisHappened

2018-ம் ஆண்டில் ட்விட்டரில் நடந்த டாப் நிகழ்வுகள், ட்ரெண்ட் ஆன ஹேஷ்டேக்கள் அடங்கிய இந்தியாவுக்கான #ThisHappened தொகுப்பை வெளியிட்டுள்ளது ட்விட்டர். அதில் சர்கார் முதல் மீடு வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளன. அந்தப் பட்டியல் என்னவென்று பார்ப்போம்.

2018-ன் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் 

இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, மக்கள் இந்திய அணியின் ஆட்டத்தை ஸ்டேடியத்தில் வந்து பார்க்குமாறு அழைத்து இன்டெர்கான்டினென்டல் கப் போட்டியின் முன், வீடியோ ஒன்றை ட்வீட் செய்திருந்தார். இதைப் பிரபலங்கள் உட்பட பலரும் பகிர்ந்து ஆட்டத்தைப் பார்க்க மக்களும் வந்துசேர்ந்தனர். இப்படி அவர் பதிவிட்ட அந்த ட்வீட்தான் இந்த வருடத்தின் இந்தியாவில் அதிகம் பகிரப்பட்ட ட்வீட்.

ட்விட்டர்

2018-ன் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் 

வடஇந்தியாவில் கணவரின் நல்வாழ்வுக்காக மனைவி விரதம் இருக்கும் கர்வாசவுத் பண்டிகையின்போது கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் நிலவொளியில் (பௌர்ணமிக்கு நான்கு நாள்கள் பின்தான் இது கொண்டாடப்படுகிறது) எடுத்த ஒரு போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதுதான் 2018-ல் இந்திய ட்விட்டர்வாசிகளால் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் என்று அறிவித்துள்ளது ட்விட்டர்.

கோஹ்லி

2018-ன் டாப் 10 ஹேஷ்டேக்குகள்

இந்த வருடம் ட்விட்டரில் இந்தியாவில் நமது தென்னிந்தியத் திரைப்படங்கள் சார்ந்த ஹேஷ்டேக்குகள்தான் அதிகம் ட்ரெண்ட் ஆகியிருக்கின்றன. முதல் பத்து இடங்களில் 6 இடங்களைத் தென்னிந்தியப் படங்கள் பிடித்துள்ளன. இதில் 3 தமிழ்ப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல்லில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் #WhistlePodu ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் நன்றாக ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. மேலும் இந்த லிஸ்ட்டில் அதிகம் பேசப்பட்ட மீடு ஹேஷ்டேக்கும் இடம்பெற்றுள்ளது.

1. #Sarkar
2. #Viswasam 
3. #BharatAneNenu 
4. #AravindhaSametha 
5. #Rangasthalam
6. #Kaala 
7. #BiggBossTelugu2
8. #MeToo
9. #WhistlePodu
10. #IPL2018

சர்கார்

2018-ல் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய டாப் 10 ட்விட்டர் நிகழ்வுகள் 

இந்தப் பிரிவில் இந்தியச் சமூகத்தில் அதிக உரையாடல்களை உருவாக்கிய முக்கிய ட்விட்டர் நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளது ட்விட்டர். கதைத்திருட்டு பிரச்னை தொடங்கி ஆளுங்கட்சி எதிர்ப்பு வரை பல விவாதங்களை உண்டாக்கியது சர்கார் திரைப்படம். அதனால் டாப் 10 ஹேஷ்டேக்குகள் மட்டுமல்லாமல் இதிலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது சர்கார் திரைப்படம். இதுபோக முக்கியப் பிரச்னையான மீடு, பரபரப்பைக் கிளப்பிய கர்நாடகா தேர்தல், கேரளா வெள்ளம், ஆசிஃபா வழக்கு எனப் பல முக்கிய நிகழ்வுகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் ஆதார் தொடர்பாக பல சர்ச்சைகள் கிளம்பியதால் அதுவும் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ரன்வீர் சிங், தீபிகா படுகோன் திருமணமும் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

1. #Sarkar
2. #MeToo
3. #KarnatakaElection
4. #KeralaFloods
5. #Aadhaar
6. #JusticeForAsifa
7. #Deepveer
8. #IPL2018
9. #WhistlePodu
10. #AsianGames2018

2018-ல் அதிகம் பேசப்பட்ட இந்திய ட்விட்டர் கணக்குகள்

இந்த வருடம் பல மாநிலங்களில் தேர்தல்கள் நடந்ததால் அரசியல்வாதிகள் பலரும் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. 10 இடங்களில் 6 இடங்களை அவர்களே பிடித்துள்ளனர். எதிர்பார்த்தது போலவே முதல் இரண்டு இடங்களில் நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் உள்ளனர். இந்த வருடம் தெலுங்கு சினிமாவில் தனது 25-வது படத்தில் நடித்து முடித்து முழுநேர அரசியலுக்கு வரவிருக்கும் பவன் கல்யாண்தான் திரைபிரபலங்களில் முன்னணியில் இருக்கிறார். இவர்களுக்குப் பின் ஷாருக்கான், விஜய், மகேஷ் பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

1. @narendramodi
2. @RahulGandhi
3. @AmitShah
4. @myogiadityanath
5. @AravindKejriwal
6. @PawanKalyan
7. @iamsrk
8. @actorvijay
9. @urstrulyMahesh
10. @ChouhanShivraj

ட்விட்டர் கணக்கு

படம்: blog.twitter.com

எப்போதையும் போல இந்த வருடமும் லிஸ்ட்டில் சினிமா சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருந்தாலும், மற்ற விஷயங்களும் இல்லாமல் இல்லை. மீடூ பிரச்னை மற்ற நாடுகளில் போன வருடமே பூதாகரமாக வெடித்திருந்த நிலையில் இவ்வருடம் அதன் தாக்கம் இந்தியா முழுவதும் காணப்பட்டது. மேலும் வெள்ளத்தில் தத்தளித்த கேரளாவைக் காப்பாற்ற, ஆசிஃபாக்கு உரிய நியாயம் கிடைக்க எனப் பல நல்ல சமூக விஷயங்களுக்கும் வழிவகை செய்துள்ளது ட்விட்டர். இந்த நல்ல விஷயங்கள் இதே போன்று எப்போதும் சமூகவலைதளங்களில் தொடரும் என நம்புவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close