`ரொம்ப வருத்தம்ப்பா!'... இந்தியாவில் அமேசான் சந்திக்கும் பிரச்னை | "India returns more products than any other country", says amazon

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (05/12/2018)

கடைசி தொடர்பு:19:20 (05/12/2018)

`ரொம்ப வருத்தம்ப்பா!'... இந்தியாவில் அமேசான் சந்திக்கும் பிரச்னை

அமேசான்

கடந்த சில வருடங்களில் ஆன்லைன் வர்த்தகம் என்பது இந்தியாவில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அனைவராலும் அடையாளம் காணும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இருப்பினும் இன்னும் தங்களை முழுவீச்சில் செயல்படவிடாமல் தடுக்கும் ஒரு விஷயம் இந்தியாவில் உள்ளது என்று தெரிவிக்கின்றன இந்த நிறுவனங்கள். அது என்ன?

எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில்தான் ஆர்டர் செய்யப்படும் பொருள்கள் பெரிதளவில் திருப்பி அனுப்பப்படுகிறது என்று கூறியுள்ளார் அமேசான் நிறுவனத்தின் 'consumer and brand protection' துறையின் துணைத் தலைவர் தர்மேஷ் மேத்தா. ஆனால், இதற்கு வாடிக்கையாளர்களைப் பெரிதாகச் சாடவில்லை அவர். 

அமேசான்

உலகம் முழுவதும் பொருள்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு முக்கிய காரணம் போலி பொருள்களை விற்கும் வியாபாரிகள்தான் என்கிறது அமேசான். ஆனால், இந்தியாவில் இது கூடுதலாக இருக்கக்கூடும் எனக் கருதுகிறது அந்த நிறுவனம். இப்படி பொருள்கள் திருப்பி அனுப்பப்படுவது இரண்டாம் கட்ட நகரங்களில் அதிகமாக இருக்கிறதாம். அங்குதான் அதிகமாக கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்கள் போடப்படுகின்றன, எனவே, அவற்றை எளிதாக கேன்சல் செய்யமுடிகிறது. 

அமேசான்

மேலும், இந்தியாவில் பின்பற்றப்படும் ஆன்லைன் வர்த்தக நெறிமுறைகள் வியாபாரிகள் பலரையும் சேர்த்துக்கொள்ளுமாறு இந்த நிறுவனங்களை வற்புறுத்துகின்றன. எனவே, இப்படிச் சேர்க்கப்படும் பல வியாபாரிகளின் நம்பகத்தன்மையை சோதிப்பதே பெரும்பாடாக இந்த நிறுவனங்களுக்கு இருந்து வருகின்றன. இந்தப் போலி மற்றும் பழைய பொருள்களை விற்கும் வியாபாரிகளைச் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தர்மேஷ் மேத்தா கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close