வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:08:05 (07/12/2018)

'அலோ' சேவையை நிறுத்துகிறது கூகுள்! #Allo

வாட்ஸ்அப் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் சேவைகளுடன் போட்டியிடும் நோக்கத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சேவை 'அலோ'. 

அலோ

ஆரம்பத்தில், இதன்மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தாலும், வாட்ஸ்அப் அளவிற்கு இது மக்களிடையே சென்றுசேரவில்லை. இதைத் தொடர்ந்து, இதன்மீதான முதலீட்டை இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே நிறுத்தியது கூகுள். இந்நிலையில், தற்போது இந்தச் சேவையை முழுவதுமாகக் கைவிடப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆர்குட், கூகுள் ப்ளஸ் வரிசையில், கூகுளின் தோல்விப்பட்டியலில் அலோவும் இணைந்திருக்கிறது.

Allo

இந்த முடிவுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் துணைத்தலைவர்களுள் ஒருவரான மேட் க்ளைனர், "அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை அலோ இயங்கும். அதுவரைக்கும் பயனாளர்கள் தங்கள் உரையாடல்கள் மற்றும் பிற டேட்டாவை எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். இந்தச் சேவையின் மூலமாக நாங்கள் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம். குறிப்பாக, மெஷின் லேர்னிங்கை ஒரு மெசேஜிங் பிளாட்ஃபார்மில் பயன்படுத்தும்போது, என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை அறிந்துகொண்டோம்" என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க