இணையம் இல்லாமல் ட்ரெய்ன் ட்ராக்கிங்!...வளர்ந்துவரும் ஆப்பை வாங்கிய கூகுள் #WhereIsMyTrain | Google acquires startup which developed running live train tracking app

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (11/12/2018)

கடைசி தொடர்பு:16:00 (11/12/2018)

இணையம் இல்லாமல் ட்ரெய்ன் ட்ராக்கிங்!...வளர்ந்துவரும் ஆப்பை வாங்கிய கூகுள் #WhereIsMyTrain

இந்தியாவைப் பொறுத்தவரை போக்குவரத்து தொடர்பான விஷயங்களுக்கென்றே மிகப்பெரிய சந்தை இருக்கிறது. டிஜிட்டலிலும் அப்படித்தான். அதிலும், இந்திய ரயில் போக்குவரத்து தொடர்பான சேவைகள் என்றால் சொல்லவே வேண்டாம். இதைப் புரிந்துகொண்ட கூகுள் நிறுவனம் ,"Where is my Train" என்னும் வளர்ந்துவரும் செயலியை உருவாக்கிய Sigmoid Labs என்னும் நிறுவனத்தை வாங்கியுள்ளது. 

கூகுள்

தமிழ் உட்பட 8 இந்திய மொழிகளில் இயங்கும் இந்தச் செயலி, ரயிலில் பயணம் செய்யும்போது இணையச் சேவை இல்லாமலேயே இயங்கவல்லது. இதுவரை சுமார் 1 கோடி பேர் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கியுள்ளனர். மேலும், தற்போது ஒரு ரயில் நிலையத்தில் எந்தெந்த நடைமேடைகளில் ரயில்கள் நிற்கிறது, ரயில் பெட்டிகள் எந்த வரிசையில் இருக்கும், இந்த நிமிடத்தில் ரயில் எங்கே இருக்கிறது, சீட் அவைலபிளிட்டி போன்ற ரயில் போக்குவரத்து சார்ந்த முக்கியத் தகவல்கள் அனைத்தையும் இந்த செயலியிலேயே பெற்றுவிட முடியும். இதில் இருக்கும் சாத்தியக்கூறுகளை அறிந்த கூகுள் நிறுவனம், இதைக் கைப்பற்றியுள்ளது. சுமார் 300 கோடிக்கு இந்த நிறுவனம் விலைபோயிருக்கும் என்று கருதப்படுகிறது. கூகுளின் 'Next Billion users' (அடுத்த 100 கோடி பயனாளர்கள்) திட்டத்தின் ஒரு பகுதியாக இது நிகழ்ந்துள்ளது. இதுவரை ஜிமெயில், குரோம், மேப்ஸ், யூடியூப் உட்பட கூகுளின் 8 சேவைகள் 100 கோடிக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களைக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Where is my  train

Sigmoid Labs நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கூகுள் போன்ற ஒரு பெரிய நிறுவனத்துடன் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பல முன்னேற்றங்களுக்கு இது வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தற்போது, ஆண்ட்ராய்டு மொபைல்களுக்குக் கிடைக்கும் இந்தச் செயலி, விரைவில் ஐஓஎஸ் மொபைல்களுக்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க