இந்த வருடம் யூடியூபில் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ இதுதான்! | Youtube's own video is the second most disliked video in the youtube

வெளியிடப்பட்ட நேரம்: 01:24 (12/12/2018)

கடைசி தொடர்பு:07:38 (12/12/2018)

இந்த வருடம் யூடியூபில் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ இதுதான்!

கோலிவுட்டில் மெகாஸ்டார் படங்களின் டீசர், டிரெய்லர், பாடல் என எது வந்தாலும், உடனே எதிர்தரப்பு ரசிகர்கள் அனைவரும் ஓடிப்போய் அதை டிஸ்லைக் செய்வர். இது இங்கே மட்டுமல்ல; உலகம் முழுவதுமே நடக்கக்கூடியதுதான். ஆனால், இந்தமுறை யூடியூபின் சொந்த வீடியோவுக்கே நடந்திருக்கிறது என்பதுதான் சுவாரஸ்யம். 

யூடியூப்

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும், அந்த வருடம் யூடியூபில் வைரலான மற்றும் அதிகம்பேரால் பார்க்கப்பட்ட வீடியோக்கள், பிரபலங்கள் குறித்த தொகுப்பை யூடியூப் வெளியிடும். அப்படித்தான் YouTube Rewind 2018 என்ற பெயரில் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம். இதில் வில் ஸ்மித், ஜான் ஆலிவர், மார்கஸ் பிரவுன்லீ உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இடம்பெற்றிருந்தனர். 2018-ம் ஆண்டு முழுவதும் அதிகம் ட்ரெண்ட் ஆன விஷயங்களை நினைவுபடுத்தும்விதமாக, இந்த ஆண்டு யூடியூபில் பிரபலமான அனைவரையும் ஒருங்கிணைத்து, Fortnite கேம் தீமில் அந்த வீடியோ தொகுப்பை வெளியிட்டிருந்தது யூடியூப்.

ஆனால், இது ரசிகர்களை ஈர்ப்பதற்குப் பதில் எரிச்சலடையவே செய்தது. இதனால் உடனே டிஸ்லைக்குகளைக் குவிக்கவே இதுவரைக்கும் 8.2 மில்லியன் பேர் இந்த வீடியோவை டிஸ்லைக் செய்திருக்கின்றனர். இதற்கு முன்பு 2010-ல் ஜஸ்டின் பைபரின் 'Baby' பாடல் வெளியிடப்பட்டபோது அதனை 9.7 மில்லியன் பேர் டிஸ்லைக் செய்திருந்தனர். இதுவரைக்கும் அதிகம்பேர் டிஸ்லைக் செய்த வீடியோ அதுதான்.

 

 

அந்த வரிசையில் இரண்டாவதாக இடம்பெற்றிருக்கிறது யூடியூபின் இந்த வீடியோ. ``மக்களைக் கவரும் நோக்கில் இல்லாமல், வெறுமனே விளம்பரதாரர்களை மட்டுமே மனதில் வைத்து இந்த வீடியோவைத் தயாரித்திருக்கிறது யூடியூப். அதனால்தான் இத்தனை யூடியூப் ஸ்டார்கள் அதில் இடம்பெற்றிருந்தும் மக்களை வெறுப்படைய வைத்துள்ளது" என்கின்றனர் விமர்சகர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க