2 நாள் பேட்டரி நிற்கும் மொபைல் தேடுறீங்களா?! - இதோ அஸூஸின் பதில் #ZenfoneMaxProM2 | asus launches two new smartphones

வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (13/12/2018)

கடைசி தொடர்பு:11:09 (13/12/2018)

2 நாள் பேட்டரி நிற்கும் மொபைல் தேடுறீங்களா?! - இதோ அஸூஸின் பதில் #ZenfoneMaxProM2

பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இதே விலையில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது சிறப்பான வசதிகளைக் கொண்டிருக்கின்றன.

2 நாள் பேட்டரி நிற்கும் மொபைல் தேடுறீங்களா?! - இதோ அஸூஸின் பதில் #ZenfoneMaxProM2

மொபைல் சந்தையில் இருக்கும் போட்டியைச் சமாளிக்க சில மாதங்களுக்கு முன்னால் ஃபிளிப்கார்ட்டுடன் கைகோத்தது அஸுஸ் நிறுவனம். அதன்படி பட்ஜெட் செக்மென்டில் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தியதுடன் ஆன்லைன் விற்பனையை அதிகப்படுத்தவும் முடிவு செய்தது. அதன்படி ஆன்லைனில் ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே புதிய அஸுஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அந்தக் கூட்டணியில் வெளியான முதல் ஸ்மார்ட்போனான Asus Zenfone Max Pro M1 சந்தையில் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான அந்த ஸ்மார்ட்போனின் அடுத்த வெர்ஷனை தற்பொழுது அறிமுகப்படுத்தியிருக்கிறது அஸுஸ் நிறுவனம். Asus ZenFone Max Pro M2 மற்றும் ZenFone Max M2 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் நேற்றைக்கு வெளியிடப்பட்டுள்ளன.

இரண்டு நாள் பேட்டரி, பவர்புல் புராசஸர்

அஸூஸ்


Asus ZenFone Max Pro M2 என்ற ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் டிஸ்ப்ளே 19:9 ரேஷியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 6 புரோவில் உள்ள அதே அளவு. இதில் உள்ள மற்றொரு சிறப்பு இந்த டிஸ்ப்ளேவைப் பாதுகாக்க கொரில்லா கிளாஸ் 6 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செக்மென்டில் உள்ள வேறு எந்த ஸ்மார்ட்போன்களிலும் இது கிடையாது. கொரில்லா கிளாஸ் 6 பெரும்பாலும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில்தான் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனில் இருப்பது இதுதான். கொரில்லா கிளாஸ் 6 என்பதால் டிஸ்ப்ளேவுக்குக் கூடுதலாகப் பாதுகாப்பு கிடைக்கும். அதே போல் இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய மற்றொரு விஷயம் இதன் புராசஸர். இதில் Snapdragon 660 புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செக்மென்டில் சில ஸ்மார்ட்போன்களே இந்த புராசஸரைப் பயன்படுத்துகின்றன. இதே புராசஸரை கொண்டுள்ள மற்றொரு ஸ்மார்ட்போன் ரியல்மீ 2 புரோ. பட்ஜெட் செக்மென்டில் அதிகப் பேரால் விரும்பப்படும் ஷியோமி நிறுவனம் கூட ரெட்மி நோட் 6-ல் இதை விடக் குறைவான திறன் கொண்ட புராஸரையே பயன்படுத்துகிறது.

அஸூஸ் ஸ்மார்ட்போன்


இந்த ஸ்மார்ட்போன்களில் அஸுஸ் குறிப்பிட்டுக் காட்டும் மற்றொரு முக்கிய விஷயமாக இதன் பேட்டரி இருக்கிறது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களுமே 5000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கின்றன. பட்ஜெட் செக்மென்டைப் பொறுத்தவரையில் பேட்டரி பேக்அப் என்று வந்து விட்டால் அதில் ஷியோமிக்குத்தான் முதலிடம். அந் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை பலர் விரும்புவதற்கு அதுவும் ஒரு காரணம். எனவே மற்ற நிறுவனங்களும் அதே திறன் கொண்ட பேட்டரிந்த் தங்களது ஸ்மார்ட்போனில் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்றன. அஸுஸ் நிறுவனமும் இதற்கு முன்பு Asus Zenfone Max Pro M1 ஸ்மார்ட்போனில் சற்று கூடுதலாக 5000 mAh பேட்டரியைக் கொடுத்திருந்தது. அதைக் குறைக்க முயற்சி செய்யாமல் அதே திறன் கொண்ட பேட்டரியை இதிலும் கொடுத்திருக்கிறது. இதன் மூலமாக இரண்டு நாள்களுக்கு மேலாக பேட்டரி பேக்அப்பைப் பெறலாம் என விளம்பரப்படுத்துகிறது அஸுஸ். உண்மையில் இது சாத்தியமில்லாத ஒன்றுதான் என்றாலும், குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மேலாவது மொபைலில் சார்ஜ் நிற்கும் என்றும் எதிர்பார்க்கலாம் 12 +5 மெகாபிக்சல் டூயல் கேமரா பின்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 13 MP கேமரா முன்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஃபிளாஷ் வசதியும் இருக்கிறது. 3 GB ரேம் 32 GB இன்டர்னல் மெமரி மாடல் 12,999 ரூபாய்க்கும், 4 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 14,999 ரூபாய்க்கும் மற்றும் 6 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 16,999 ரூபாய்க்கும் கிடைக்கும். 

ஸ்மார்ட்போன்

மற்றொரு ஸ்மார்ட்போனான Asus ZenFone Max M2-க்கும் Max Pro M2-வுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் இல்லை. இரண்டு ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளேவிலும் நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தையதைப் போலவே இதிலும் 6.26 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. Max Pro M2 ஸ்மார்ட்போனில் 4000 mAh பேட்டரி இருக்கிறது. Qualcomm Snapdragon 632 ஆக்டாகோர் புராசாஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறமாக 13 MP + 2MP கேமராவும் 8 MP முன்புற கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 3 GB ரேம் 32 GB இன்டர்னல் மெமரி மாடல் 9,999 ரூபாய்க்கும் மற்றும் 4 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 11,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது.


டிரெண்டிங் @ விகடன்