`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்!' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை | 3D printed faces can hack facial recognition systems

வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (14/12/2018)

கடைசி தொடர்பு:20:55 (14/12/2018)

`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்!' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை

ஃபேசியல் ரெகக்னிஷன் தொழில்நுட்பமானது இன்றைய காலகட்டத்தில் பெரிதும் பிரபலமாகி வருகிறது. இது சமூக வலைதளங்களில் தொடங்கி பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இன்று இதன் முக்கியப் பயன்பாடு நமது மொபைல்களில்தான் இருக்கிறது. ஆப்பிளின் ஃபேஸ் ஐடி, ஃபேஸ் அன்லாக் போன்று மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல பாதுகாப்பு வசதிகள் இதை மையப்படுத்தித்தான் இயங்குகின்றன. ஆனால், இவை உண்மையிலேயே பாதுகாப்பானதுதானா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது ஃபோர்ப்ஸ் நிறுவனம் செய்த சோதனை.

3D பிரிண்ட்

நபரின் தலை 3D-யில் பிரிண்ட் செய்யப்பட்டு அதை வைத்து இந்தத் தொழில்நுட்பத்தை ஏமாற்ற முடியுமா என்று முயற்சி செய்துள்ளது ஃபோர்ப்ஸை சேர்ந்த ஒரு குழு. ஐபோன் எக்ஸ் மொபைலும் ஆண்ட்ராய்டு மொபைல்களான எல்ஜி ஜி7 ThinQ, சாம்சங் எஸ்9, சாம்சங் நோட் 8, ஒன் ப்ளஸ் 6 மொபைல்களிலும் இது சோதனை செய்யப்பட்டுள்ளது. ஐபோனைத் தவிர, மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களில் எல்லாம் இந்த 3D மாடலைக்கொண்டே அன்லாக் செய்ய முடிந்திருக்கிறது. ஐபோன் எக்ஸ் மட்டும்தான் இதில் ஏமாறாமல் இருந்திருக்கிறது.

ஃபேஸ் லாக்

இதில் சாம்சங், எல்ஜி நிறுவனங்கள் முதலிலேயே இது மட்டும் நம்பியிருப்பது பாதுகாப்பானது அல்ல என்று எச்சரிக்கை தருகிறது. ஆனால், ஒன் ப்ளஸில் அதுவும் இல்லை. இருப்பினும் எளிதில் ஓப்பன் செய்யமுடிகிறது. ஆனாலும், இப்படிச் செய்வது கடிமானதுதான் எனவே கூடவே இன்னொரு பாதுகாப்பு வசதி வைத்திருப்பது நல்லது என்கின்றனர் அவர்கள்.

வீடியோ கீழே,

நீங்க எப்படி பீல் பண்றீங்க