இன்னும் இந்த பாஸ்வேர்டுதான் வச்சிருக்கீங்களா... மாத்திடுங்க பாஸ்! | Worst passwords of 2018

வெளியிடப்பட்ட நேரம்: 01:32 (15/12/2018)

கடைசி தொடர்பு:01:32 (15/12/2018)

இன்னும் இந்த பாஸ்வேர்டுதான் வச்சிருக்கீங்களா... மாத்திடுங்க பாஸ்!

ஹேக்கிங் தொடர்பான சம்பவங்கள் எப்போது எங்கே நடந்தாலும், அதில் முக்கியமான இரண்டு விஷயங்களை நாம் கவனிக்கலாம். ஒன்று, ஹேக்கிங் செய்யப்பட்ட நெட்வொர்க்குடன் தொடர்புடையவர்கள் அல்லது கணினியின் உரிமையாளர்கள் யாரையேனும் ஏமாற்றி, அதை ஹேக் செய்திருப்பார்கள் அல்லது அந்த நெட்வொர்க் சம்பந்தப்பட்ட பாஸ்வேர்டைத் திருடியிருப்பார்கள். எவ்வளவு பெரிய ஹேக்கிங் சம்பவங்கள் என்றாலும், இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் நடந்திருக்கும்.

இதில் முதல் விஷயத்தில் கவனமாக இருப்பதற்கு விழிப்புஉணர்வும், எச்சரிக்கை உணர்வும்தான் முக்கியம். அதே இரண்டாவது விஷயத்திற்கு இன்னும் எளிது; நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளைப் பாதுகாப்பானதாக வைத்திருந்தாலே போதும். ஆனால், அதைப் பெரும்பாலானோர் செய்வதில்லை. அதை நிரூபிக்கும் வகையில் வெளியாகியிருக்கிறது SplashData எனும் நிறுவனத்தின் தரவுகள்.

பாஸ்வேர்டு

ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பலவீனமான பாஸ்வேர்டுகள் குறித்த தொகுப்பை இந்நிறுவனம் வெளியிடும். இதற்காக அந்த ஆண்டில் இணையத்தில் லீக் ஆன 50 மில்லியனுக்கும் மேலான பாஸ்வேர்டுகள் அலசி ஆராயப்படும். அப்படி ஆராயப்பட்டு, இந்த வருடமும் டாப் 100 பலவீனமான பாஸ்வேர்டுகளின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் முதலிடம் எதற்குத் தெரியுமா? 123456. ஆம், இந்த 6 எண்கள்தான் இன்னும் பலபேரால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இதற்கடுத்த இடத்தைப் பிடித்திருப்பது password. இந்தப் பட்டியலில் 'sunshine', 'donald' போன்ற சில புதிய பாஸ்வேர்டுகளும் இணைந்திருக்கின்றன.

Password

டாப் 10 பலவீனமான பாஸ்வேர்டுகள் பட்டியல் இதோ.

123456
password
123456789
12345678
12345
111111
1234567
sunshine
qwerty
iloveyou

Password

இந்த கடவுச்சொற்களை ஏதேனும் அக்கவுன்ட்களுக்கு நீங்களும் வைத்திருந்தால், கண்டிப்பாக மாற்றிவிடுங்கள். இதேபோல ஒரே பாஸ்வேர்டை அனைத்து கணக்குகளுக்கும் வைத்திருந்தாலும் அவற்றை மாற்றிவிடுங்கள். இதுபோன்ற எளிதான பாஸ்வேர்டுகள், நம் தகவல்கள் களவுபோவதை எளிமையாக்கிவிடும். உஷார் மக்களே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க