வந்துவிட்டது `கூகுள் ஷாப்பிங்...' ஃப்ளிப்கார்ட் அமேசானுக்கு புதுப் போட்டி! | google announces its new feature called shopping

வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (15/12/2018)

கடைசி தொடர்பு:20:50 (15/12/2018)

வந்துவிட்டது `கூகுள் ஷாப்பிங்...' ஃப்ளிப்கார்ட் அமேசானுக்கு புதுப் போட்டி!

டிஜிட்டல் பிசினஸில் அக்ரிகேட்டர் (Aggregators) சேவைகளுக்குத் தேவை அதிகம். செய்தி இணையதளங்கள், ஸ்ட்ரீமிங் சேவை, சினிமா டிக்கெட் புக்கிங் எனப் பலதுறைகளிலும் இந்த அக்ரிகேட்டர்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். ஆனால், ஷாப்பிங் விஷயத்தில் மட்டும் அப்படிச் சொல்லிக்கொள்ளும்படி யாரும் இல்லை. அதைத் தீர்க்கும்படியாக வந்திருக்கிறது கூகுள் 'Shopping'. ஏற்கெனவே அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இருப்பவற்றைத்தான் கூகுள் இதிலும் காட்டும். ஆனால், அவையனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கலாம் என்பது மட்டும் சிறப்பு.

கூகுள் ஷாப்பிங்

இதற்காக கூகுளின் சர்ச் வசதியில் `Shopping' என்னும் ஆப்ஷனையும் சேர்த்திருக்கிறது. எனவே, ஏதாவது ஒரு பொருள் பற்றி இணையத்தில் தேடினால், அதனுடைய படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடன் ஷாப்பிங் செய்வதற்கான இணைப்பும் வரும். அமேசான், ஃப்ளிப்கார்ட், ஷாப்க்ளூஸ் போன்ற தளங்களில் இருக்கும் பொருள்கள் மட்டுமன்றி, கூகுளின் பயனாளர்கள் பதிவுசெய்துகொள்ளும் பொருள்களையும் கூகுள் இதில் காட்டும். இதற்காக, கூகுளின் மெர்ச்சன்ட் சென்டர்க்கு சென்று பதிவுசெய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், இலவசமாகவே நம் பொருள்களைக் கூகுள் ஷாப்பிங்கில் லிஸ்ட் செய்துவிட முடியும். 

Google shopping

இதுதவிர நேரிலோ அல்லது புகைப்படங்களிலோ நாம் பார்க்கும் துணி அல்லது பொருளை கூகுள் லென்ஸ் மூலம் ஸ்கேன் செய்தால், உடனே அந்தப் படத்தின் இணைய இணைப்பையும் இந்த ஷாப்பிங்கில் தேடிக் கண்டுவிட முடியும். இப்போதைக்குப் பிற தளங்களோடு ஒப்பிடுகையில் கூகுளின் ஷாப்பிங் மிக சுமாராகவே இருக்கிறது. இன்னும் நிறைய மேம்படுத்தி, எதிர்காலத்தில் கூகுளுக்கென நிறைய வணிகர்கள் வரும்பட்சத்தில் பிற தளங்களுக்கு சவாலாக இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க