ஷியோமியின் ஃபேன் சேல்- விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் | Xiaomi's fan sale, reduced prices of smartphones

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (20/12/2018)

கடைசி தொடர்பு:09:30 (20/12/2018)

ஷியோமியின் ஃபேன் சேல்- விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வருட இறுதியை முன்னிட்டு No.1 Mi Fan Sale' என்ற பெயரில் சிறப்பு விற்பனையைத் தொடங்கியிருக்கிறது ஷியோமி நிறுவனம்.

ஷியோமி

நேற்று தொடங்கிய இந்த விற்பனை நாளை வரை நடைபெறும். இதில் ஸ்மார்ட்போன்கள் மற்றும்  எல்இடி டிவிக்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். Mi A2 (6GB+128GB ) வேரியண்ட் மாடல் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு 16,999  ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி 6A

Redmi Y2, மற்றும் நோட் 5 புரோ ஆகியவற்றின் விலை ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.POCO F1 (8GB+256GB) Armoured Edition மாடல்  2000 ரூபாய் குறைக்கப்பட்டள்ளது.மற்ற வேரியன்ட்கள் ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் எல்இடி  டிவிக்களின் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது
Mi LED TV 4A PRO (49),  Mi LED TV 4A மற்றும் Mi LED TV 4C PR ஆகியவற்றின் விலையில் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பேடிஎம், மொபிக்விக் மற்றும் கூகுள் பே போன்றவற்றின் மூலமாக பணம் செலுத்தினால் கேஷ்பேக் ஆபர்களையும் பெற முடியும்.

ரெட்மி டிவி