கூகுள் பே போன்ற UPI சேவைகளுக்கு போட்டியாகக் களமிறங்கும் ஷியோமியின் Mi பே! | Xiaomi to launch MI pay in India to compete with Google pay and others

வெளியிடப்பட்ட நேரம்: 09:06 (23/12/2018)

கடைசி தொடர்பு:09:06 (23/12/2018)

கூகுள் பே போன்ற UPI சேவைகளுக்கு போட்டியாகக் களமிறங்கும் ஷியோமியின் Mi பே!

ஷியோமி தனது பணபரிவர்த்தனை சேவையான Mi பே-வை இந்தியாவிலும் கொண்டுவரவுள்ளது. இதற்காக ஐசிஐசிஐ வங்கி மற்றும் PayU தளத்துடன் கூட்டணி வைத்து இதைச் செய்யவுள்ளது அந்த நிறுவனம். சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த Mi பே அங்கு NFC தொழில்நுட்பம் மூலம் பணப்பரிவர்த்தனைகள் செய்யும் சேவையாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் வரவிருக்கும் Mi பே கூகுள் பே போன்ற வடிவத்தையே பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஷியோமி

UPI சேவைக்காக NPCI (National Payments Corporation of India) அனுமதி வழங்கிவிட்டதாக அறிவித்தது ஷியோமி. இதனால் தற்போது தனது இந்த சேவையை சோதனை செய்ய பீட்டா டெஸ்டிங் நடக்கவுள்ளது. இதில் பங்குபெற விரும்புவோர் டிசம்பர் இறுதிக்குள் 'MIUI Global Beta ROM' பதிவுசெய்யவேண்டும்.

GPAY

QR ஸ்கேனிங் மூலம் பேமென்ட், UPI அட்ரஸ் மூலம் ஒருவருக்குப் பணம் அனுப்புதல், ரீசார்ஜ் மற்றும் பில் கட்டுதல் என இப்போது பைடிஎம், கூகுள் பே சேவைகளில் என்ன இருக்கிறதோ அது அனைத்தும் இந்த Mi பே-விலும் இருக்குமெனத் தெரிகிறது. புதிதாக வேறு என்ன வசதிகள் எல்லாம் இருக்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஏற்கெனவே பிரபலமாகிவிட்ட பைடிஎம், கூகுள் பே போன்ற சேவைகளின் போட்டியைத் தாண்டி இதிலும் வெற்றிகொண்டு தன் ஆதிக்கத்தைக் காட்டுமா ஷியோமி? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க