30,000 பேரைத் தடைசெய்த பப்ஜி காரணம் என்ன? | PUBG bans 30,000 players for using this hack

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (25/12/2018)

கடைசி தொடர்பு:20:30 (25/12/2018)

30,000 பேரைத் தடைசெய்த பப்ஜி காரணம் என்ன?

இந்த வருடத்தின் மக்களால் பெரிதாக விளையாடப்பட்ட கேம்களில் பப்ஜி முக்கிய இடத்தைப் பிடிக்கும். வெளியான கொஞ்சம் மாதங்களிலேயே பெரும் ஹிட் அடித்தது இந்த கேம். ஆனால், விளையாடுபவர்கள் கூட கூட ஏமாற்றுவேலைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வந்தது. இதைப்போன்று 'Cheats' பயன்படுத்துபவர்களைத் தடுத்து நிறுத்த ஏற்கெனவே ஒரு 'anti-cheat' டிரைவ் ஒன்றை ரெடி செய்தது இந்த கேம்மின் வடிவமைப்பு குழு. இருப்பினும் மற்றும் சில தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்தி சிலர் ஏமாற்றிக்கொண்டுதான் இருந்தனர்.

பப்ஜி

இதனால் இன்னுமொரு மேம்பட்ட 'anti-cheat' டிரைவ் ஒன்றைச் சமீபத்தில் செயல்படுத்தியது. இது பிரபல 'Radar Hack cheat' முறையைக் கண்டறியவல்லது. இதை வைத்து இதைப் பயன்படுத்துவார்கள் யாரெனக் கண்டு அவர்களைத் தடைசெய்யமுடியும். இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட கணக்குகள் இப்படித் தடைசெய்யப்பட்டுள்ளது. இதில் உலக அளவில் பிரபலமான சில வீரர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல்

அது என்ன Radar Hack cheat? PUBG கேம்மில் 100 வீரர்களை ஒரு மேப்பில் இறக்கி ஆடவிடுவர். சாதாரணமாக கேம்மில் இருக்கும் மேப்பில் அந்த உலகம் எப்படி இருக்கிறது எதிரிகள் எங்கே இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்கள் தெரியும். இந்த Radar Hack மூலம் மற்ற வீரர்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளமுடியும், மேலும் அவர்கள் இருக்கும் இடம் போன்றவற்றை இன்னொரு ஸ்மார்ட்போனிலோ, அல்லது இரண்டாவது டிஸ்பிளே ஒன்றிலும் பார்த்துக்கொண்டே எளிதாக ஆட உதவும் இது. 

கன்

இப்போது வந்துள்ள anti-cheat இன்னும் மொபைல் வெர்ஷனுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மொபைலில் ஆடுபவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க