ஓரினச்சேர்க்கையைப் பாவமென பரப்புரை செய்த ஆப் - அதிரடி காட்டிய ஆப்பிள் நிறுவனம் | Apple removes app claiming homosexuality as a sin

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (26/12/2018)

கடைசி தொடர்பு:07:40 (26/12/2018)

ஓரினச்சேர்க்கையைப் பாவமென பரப்புரை செய்த ஆப் - அதிரடி காட்டிய ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள், தனது ஆப் ஸ்டோரில் இருந்த ஓரினச்சேர்க்கையைப் பாவமாக சித்தரித்து பரப்புரை மேற்கொண்ட ஆப் ஒன்றை நீக்கியுள்ளது. மாற்றுப் பாலின விருப்பங்கள் கொண்டவர்களின் உரிமைக்குக் குரல்கொடுக்கும் LGBTQ அமைப்பு, இதற்கு எதிராக மனு ஒன்று கொடுத்ததற்குப் பிறகு, இந்த ஆப்பை நீக்கியுள்ளது ஆப்பிள். டெக்ஸாஸை அடிப்படையாகக் கொண்ட மதக் குழுவான 'லிவிங் ஹோப் மினிஸ்ட்ரிஸ்' என்ற மத அமைப்பால் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஓரினச்சேர்க்கையிலிருந்து பிரார்த்தனை மற்றும் தெரபி மூலம் விடுபடுங்கள்' என்று பிரசாரம் செய்தது அந்த ஆப். 

ஆப்பிள்

LGBTQ அமைப்பினர், "இப்படி ஒரு பெரு நிறுவனம் அதற்கான பொறுப்புடன் நடந்துகொண்டு, ஆபத்தான மற்றும் தவறான பிரசாரங்களைச் செய்துவரும் இந்த ஆப்பை நீக்கியதற்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு நன்றி. இது, ஓரினச்சேர்க்கையாளர்களின் மனங்களில் தவறான பிம்பத்தை உருவாக்க வல்லது" என்றது.

லவ் இஸ் லவ்

அதே நேரம், இந்த ஆப்பை உருவாக்கிய 'லிவிங் ஹோப் மினிஸ்ட்ரிஸ்' அமைப்பு,"நாங்கள் எங்களை நாடிவருபவர்களுக்கு மட்டும்தான் உதவிசெய்கிறோம்" என்றது. தங்களிடம் எந்த ஒரு முன்னறிவிப்பும் கொடுக்காமல் ஆப்பிள் தங்கள் ஆப்பை  நீக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டையும் வைத்தது.

ஆப் ஸ்டோர்

ஆப்பிளின் இந்த முடிவு பெரும் வரவேற்பை ஒருபுறம் பெற்றாலும், இன்னொருபுறம் எதிர்ப்பையும் சந்தித்துவருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க