வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (26/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (26/12/2018)

PUBG-க்கு மஹாராஷ்டிராவில் தடையா? வைரலான புகைப்படமும் பின்னணியும்

இரண்டு நாள்களாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு படம் பரவிவருகிறது. இதில், PUBG விளையாட்டு மக்களுக்கு பல விதத்தில் தொல்லைகளை ஏற்படுத்துவதாகவும், பொறுப்பற்ற சம்பவங்களில் அவர்களைப் பங்கெடுக்க வழிவகுப்பதாகவும், மாணவர்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்துவதாகவும் அமைந்துள்ளதால், இந்த விளையாட்டை தடைசெய்ய மஹாராஷ்டிரா உயர் நீதிமன்றம் உத்தரவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

PUBG

இந்தப் படம், PUBG விளையாடும் `வீரர்’களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் அந்த அதிர்ச்சியில் அறிக்கையை ஆராயாமல் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவந்தனர். ஆனால், அந்தப் படத்தை ஆராய்ந்து பார்த்ததில்  'HIGH COURT OF MAHARASHTRA' என்கிற பெயரில் எந்த ஒரு நீதிமன்றமும் இல்லை என்பதும்,'PREJUDGE' என்கிற பதவி இந்தியாவிலேயே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி, மும்பை நீதி மன்றத்தில் 'ஸ்ரீனிவாசுலு' என்கிற பெயரில் எந்த ஒரு நீதிபதியுமே இல்லை என்பதும் தெரிகிறது.

பிளேயர்

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் மேல் பதிவிறக்கங்களைக் கொண்ட இந்த கேம், சில நாள்களுக்குத்தான் 'SNOW MAP' என்கிற புதிய அப்டேட்டை வெளியிட்டது. வரும் 2019-ம் ஆண்டு, PUBG கேம் பல விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சர் செய்யவும் உள்ளது. இந்நிலையில், இந்த 'PUBG BAN' போலிச் செய்தி வைரலாகப் பரவியது. இதன் தன்மையைப் பார்க்கும்போது, இதை வேண்டுமெனவே யாரோ ஒருவர் விளையாட்டுத்தனமாக அனுப்பியதாகத்தான் தெரிகிறது. இப்படி, சமூக வலைதளங்களில் போலியான செய்திகளும் வதந்திகளும் பரவுவது, இது முதல்முறை அல்ல.