`கிம்போ செயலியை மீண்டும் வெளியிடும் திட்டமில்லை’ - பின்வாங்கிய பதஞ்சலி | Patanjali cancels plans to relaunch Kimbho app

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (26/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (26/12/2018)

`கிம்போ செயலியை மீண்டும் வெளியிடும் திட்டமில்லை’ - பின்வாங்கிய பதஞ்சலி

வாட்ஸ்அப்க்கு போட்டியாகப் பதஞ்சலி நிறுவனம் களமிறக்கிய கிம்போ செயலியை மீண்டும் வெளியிடும் திட்டம் இல்லை என்று பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிம்போ

கடந்த மே மாதம் 30-ம் தேதி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுதேசி செயலி என்கிற முழக்கத்தோடு வெளியிடப்பட்ட இந்தச் செயலி போட்டோ, வீடியோ, ஸ்டிக்கர், போன்றவற்றை சப்போர்ட் செய்தது. இருப்பினும் பதிவேற்றப்பட்டு 24 மணி நேரத்தில் பாதுகாப்பு சிக்கல் காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர். ஆகஸ்ட் 15-ம் தேதி சோதனை பதிப்பு பதிவேற்றப்பட்டது. இந்த வெர்சன் வாட்ஸ்அப்பை போல END-TO-END ENCRYPTION கொண்டிருந்தது. இதன் முழு வெர்சன் ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், கிம்போவில் இருக்கும் பிழைகளைச் சரி செய்ய முடியாத காரணத்தால் செயலியை வெளியிடும் திட்டத்தைக் கைவிடுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப்க்கு மாற்றாக இருக்கும் என்ற அறிவிப்போடு வெளியான இந்தச் செயலி வெளியிடப்பட்ட இரண்டு முறையும் தோல்வியைத் தழுவியது. பாதுகாப்பு அம்சங்களுக்காக நொய்டாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் கைகோத்த பின்பும் தாங்கள் நினைத்த அளவு பாதுகாப்பு வழங்க முடியாத காரணத்தால் இந்த முடிவைப் பதஞ்சலி நிறுவனம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிம்போ இப்பொழுது வெளியிடப்படாது என்றும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் பதஞ்சலி நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.