ஆப்பிளின் ஐபோன்கள் இனி நம்ம சென்னையில் ரெடி ஆகும்! | Iphones to be assembled in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 06:50 (28/12/2018)

கடைசி தொடர்பு:07:28 (28/12/2018)

ஆப்பிளின் ஐபோன்கள் இனி நம்ம சென்னையில் ரெடி ஆகும்!

பிரபல நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் உயர்ரக ஐபோன்கள் விரைவில் சென்னையிலேயே தயாராகவுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில்‌ நோக்கியா ஆலை இருந்த இடத்தில்‌ ஃபாக்ஸ்கான் என்ற நிறுவனம் இந்த தயாரிப்பை நடத்தவுள்ளது. இந்த நோக்கியா ஆலை 2014-ம் ஆண்டு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்போது பலரும் வேலையிழந்தனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியாக ஃபாக்ஸ்கானுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது அரசு.

ஐபோன்

இந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கெனவே ஷியோமி உட்படப் பல முன்னணி நிறுவனங்களுக்கு மொபைல் தயாரித்துத் தருகின்றன. ஐபோன் தயாரிப்புக்காக அந்நிறுவனம் சுமார் 2,500 கோடி ரூபாயை இங்கு முதலீடு செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படும் என நம்பலாம்.

Foxconn

மாதிரி படம்

இதற்கு முன்புவரை விஸ்ட்ரோன் கார்ப் என்ற நிறுவனத்தின் மூலம் பழைய மாடல்களான SE மற்றும் 6S ஐபோன்களைதான் பெங்களூரில் தயாரித்து வந்தது ஆப்பிள். இந்தத் திட்டத்தின் மூலம் இனி உயர்ரக மாடல்களான ஐபோன் XS மற்றும் அதற்கு மேலான மாடல்களும் தயாரிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. பெரும்பாலும் மற்ற இடங்களில் தயாராகும் பாகங்களை ஒன்று சேர்த்துப் போனாக அசெம்பிள் செய்யும் தொழிற்சாலையாகத்தான் இது இருக்கும்.

Foxxcon 2

மாதிரி படம்

ஆனால், இந்தத் திட்டத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டின் முதல் பாதிக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க