``இதெல்லாம் ஒரு வருஷத்துல நடக்குற விஷயம் இல்ல’’ - மார்க் சக்கர்பெர்க் விளக்கம்! | Mark Zuckerberg shares about Facebook's initiatives in 2018

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (29/12/2018)

கடைசி தொடர்பு:16:00 (29/12/2018)

``இதெல்லாம் ஒரு வருஷத்துல நடக்குற விஷயம் இல்ல’’ - மார்க் சக்கர்பெர்க் விளக்கம்!

ப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் நிறையவே சோதனைகளைச் சந்தித்தது ஃபேஸ்புக். தகவல் திருட்டு, வன்முறையைத் தூண்டும் வீடியோக்களின் ஆதிக்கம் என ஒவ்வொன்றும் ஃபேஸ்புக் பயனர்களையும் மக்களையும் வெவ்வேறு விதத்தில் பாதித்தன. இத்தனை சர்ச்சைகள், சோதனைகளைக் கடந்து தற்போது 2019-ல் அடியெடுத்து வைக்கவிருக்கிறது ஃபேஸ்புக். இதுதொடர்பாக மார்க் சக்கர்பெர்க் விரிவான ஃபேஸ்புக் போஸ்ட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில் இந்த வருடம் ஃபேஸ்புக் எதுமாதிரியான சவால்களையெல்லாம் சந்திக்க வேண்டியிருந்தது என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஃபேஸ்புக்

இந்த வருடம் ஃபேஸ்புக்கின் பயனர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் எனக்கு சவாலாக அமைந்தன. தேர்தல்களில் ஃபேஸ்புக் தலையீட்டைத் தடுப்பது, வன்முறையைத் தூண்டும் பேச்சுகளைத் தடை செய்வது, போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவது, பயனாளர்களின் பிரைவசி எனப் பல்வேறு நடவடிக்கைகளை எங்களின் பயனர்களின் நன்மைக்காக நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றில் நாங்கள் இதுவரைக்கும் செய்துள்ள மாற்றங்களைக் கண்டு நிச்சயம் நான் பெருமைப்படுகிறேன். 

மார்க் சக்கர்பெர்க்

2016-ல் இருந்த ஃபேஸ்புக்குக்கும் தற்போதைய ஃபேஸ்புக்குக்கும் நிறைய வேறுபாடு உண்டு. தற்போது எங்களுடைய செயல்பாடுகள் மொத்தமும் ஃபேஸ்புக் மூலம் ஏற்படும் தீமைகளைக் குறைப்பதாகவே இருக்கிறது. எங்களின் பணிகளில் தற்போது இந்த வேலைகளுக்காகவே அதிக சதவிகிதத்தை ஒதுக்கியிருக்கிறோம். 30,000-க்கும் மேற்பட்ட பயனாளர்கள் தற்போது இதற்காகவே பணிபுரிகின்றனர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் இவையனைத்தும் ஒரே வருடத்தில் நடந்து முடிகிற பணியல்ல; ஆனால், இதற்கு முன்பு இருந்ததைவிடவும், தற்போது இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இந்தப் பிரச்னைகளுக்கான எதிர்காலத் திட்டங்களையும் வகுத்துள்ளோம்.

ஃபேஸ்புக்

குறிப்பாகத் தேர்தலில் ஃபேஸ்புக் ஏற்படுத்தும் தாக்கத்தையெல்லாம் எப்போதும் முழுமையாகத் தடுக்க முடியாது. மாறாக, அந்தந்த சமயங்களில் இருக்கும் தொழில்நுட்பங்கள், அந்தப் பிரச்னையின் தன்மை ஆகியவற்றை உணர்ந்து அவற்றைத் தடுக்க முடியும். அதுபோன்ற பணிகளைத் தொடர்ந்து செய்வோம். வரும் வருடம் சிறப்பாக அமையட்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க