``அலெக்சா... அஞ்சுல மூணு போனா எவ்ளோ?’’ - ஹோம்வொர்க் செய்யும்போது மாட்டிக்கொண்ட சிறுவன்! | 6 year student caught up while doing homework with the help of Alexa

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (31/12/2018)

கடைசி தொடர்பு:18:50 (31/12/2018)

``அலெக்சா... அஞ்சுல மூணு போனா எவ்ளோ?’’ - ஹோம்வொர்க் செய்யும்போது மாட்டிக்கொண்ட சிறுவன்!

ண்ட்ராய்டு போன்களில் கூகுள் அசிஸ்டன்ட், ஆப்பிள் போன்களில் சிரி, வீடுகளில் கூகுள் ஹோம், அமேசான் அலெக்சா என வாய்ஸ் அசிஸ்டன்ட்டுகள் ஆட்சிசெய்யும் காலம் இது. நம்முடைய தனிப்பட்ட வேலைகளுக்காகப் பல்வேறு விதங்களில் இந்த வாய்ஸ் அசிஸ்டன்ட்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி அமெரிக்காவில் ஒரு சிறுவன் வாய்ஸ் அசிஸ்டன்ட்டைப் பயன்படுத்திய வீடியோ இப்போது செம வைரல்.

அமேசான் அலெக்சா

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசிக்கும் 6 வயது சிறுவன் ஜேரியல். இந்த சிறுவன் வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்தபோது அலெக்சாவைப் பயன்படுத்தியிருக்கிறான். அதைப் பார்த்த ஜேரியலின் அம்மா, ட்விட்டரில் பதிவிடவே வீடியோ வைரலாகிவிட்டது.

அலெக்சா

வீட்டுப்பாடம் செய்துகொண்டிருக்கும் ஜேரியல், சின்ன ஒரு கணக்குக்காக அலெக்சாவிடம், ``ஐந்தில் மூன்று போனால் எவ்வளவு?’’ எனக் கேட்கிறான். அலெக்சாவும் உடனே ``2’’ எனக் கூறுகிறது. உடனே ஜேரியல் அவனுடைய நோட்டில் எழுதுகிறான். இதைக் கண்டுபிடித்த ஜேரியலின் அம்மா, அதை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார். 

ஆரம்பத்தில் பலரும் ஜேரியல் எவ்ளோ ஸ்மார்ட்டா காப்பி அடிக்கிறான் எனக் கிண்டல் செய்தனர். ஆனால், இப்போதோ ஒருவேலையை எப்படி ஸ்மார்ட்டாக முடிக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் இது எனப் பாராட்டி வருகின்றனர். அந்தக் கணக்குக்கான விடையை விடவும், அலெக்சாவை எப்படி ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த வேண்டும் என்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது எனக் கமென்ட் அடிக்கின்றனர் நெட்டிசன்ஸ்.