`வாவ்... ஒரே மொபைலில் ஐந்து கேமரா..!’ - அசரடிக்கும் நோக்கியா | Nokia's new mobile PureView has 5 cameras

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (31/12/2018)

கடைசி தொடர்பு:19:10 (31/12/2018)

`வாவ்... ஒரே மொபைலில் ஐந்து கேமரா..!’ - அசரடிக்கும் நோக்கியா

டூயல் கேமராக்களே இன்னும் அனைத்து மொபைல்களுக்கும் சென்று சேரவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே மூன்று கேமரா மொபைல், நான்கு கேமரா மொபைல் என்றெல்லாம் வெளியிட்டு அசத்தி வருகிறது சாம்சங். இன்னொருபக்கம் ஹானரோ 48 MP கொண்ட மொபைலை வெளியிட்டு அசத்தியது. தற்போது அந்த வரிசையில் நோக்கியாவும் இணைந்திருக்கிறது. விரைவில் ஐந்து கேமராக்கள் கொண்ட மொபைலை வெளியிடப்போவதாகத் தகவல்களும் அவற்றின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.

நோக்கியா Pure View

Photo Courtesy: Twitter/evleaks

நோக்கியா தனது அடுத்த மொபைலை வருகிற ஜனவரி கடைசியில் அறிமுகப்படுத்தவிருப்பதாக ஏற்கெனவே கூறியிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது இந்தச் செய்தி கிடைத்துள்ளது. நோக்கியா 9 பியூர் வியூ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் பின்புறம் மொத்தம் 5 ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை OS, 8 GB ரேம், இன்டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. நாட்ச் டிஸ்ப்ளேவும் 3.5 mm ஆடியோ ஜாக்கும் இல்லை.

Nokia Pureview

Photo Courtesy: Android Pure

கேமரா குவாலிட்டியில் நோக்கியா எப்போதுமே கெத்துதான். அதே திறன் இந்தமுறையும் இருக்குமா என்பது நோக்கியா ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இவை தவிர வயர்லஸ் சார்ஜிங், 4150 mAh பேட்டரி போன்றவையும் இதில் இடம்பெற்றுள்ளன. இன்னும் சில தினங்களில் நோக்கியா இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை என்ன என்பதெல்லாம் அதன் பின்பே தெரியும்.