ஹேக் செய்யப்பட்ட அரசியல்வாதிகளின் தகவல்கள்... ஜெர்மனி அதிர்ச்சி! | German lawmakers data was stolen and leaked in online

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (05/01/2019)

கடைசி தொடர்பு:07:35 (05/01/2019)

ஹேக் செய்யப்பட்ட அரசியல்வாதிகளின் தகவல்கள்... ஜெர்மனி அதிர்ச்சி!

ஜெர்மனின் சான்சலரான ஏஞ்சலா மெர்கல், பிற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் என பலரது சொந்தத் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு ட்விட்டரில் கசியவிடப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் பல தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் அக்கவுன்ட்கள் குறித்த விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து மொத்த ஜெர்மனும் அதிர்ச்சியில் இருக்கிறது.

ஜெர்மனி அரசியல்வாதிகள்

இந்த ஹேக்கிங்கில் தலைவர்களின் மின்னஞ்சல் முகவரிகள், மொபைல் எண்கள், அடையாள அட்டைகள், கிரெடிட் கார்டு விவரங்கள், ஃபேஸ்புக் கணக்குகள் மற்றும் பிற சொந்த விவரங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்கள் அனைத்தும் திடீரென ஒரு ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியாகவே, உடனே ட்விட்டர் அந்தக் கணக்கை சஸ்பெண்டு செய்தது. இருந்தும் இந்தத் தகவல்கள் இணையத்தின் பல்வேறு பக்கங்களில் பதிவேற்றப்பட்டுவிட்டதால் அவற்றை நீக்குவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. தேசம் மொத்தத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த சைபர் தாக்குதல் குறித்து ஜெர்மனின் புலனாய்வுத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஏஞ்சலா மெர்கல்

எங்கிருந்து இந்த சைபர் தாக்குதல் நடந்தது, யார் இதைச் செய்தார் என்பது குறித்து ஜெர்மன் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. குறிப்பாக பலருக்கும் ரஷ்யா மீது சந்தேகம் இருந்தாலும், அதுகுறித்து ஜெர்மனி எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. மேலும், இந்தத் தாக்குதலை நடத்தியவர் எந்தவொரு அமைப்பையும் சாராத தனிநபராக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்கின்றனர் சைபர் நிபுணர்கள். இந்தத் தாக்குதலில் வழக்கமாக மொபைல் எண்களை ஹேக் செய்யஉதவும் 'சிம் ஸ்வாப்' முறையைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகளின் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க