டார்க் மோடு, மீடியா ப்ரிவ்யூ... வரப்போகும் வாட்ஸ்அப்பின் ஸ்பெஷல் அப்டேட்ஸ்! | WhatsApp's upcoming special updates

வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (05/01/2019)

கடைசி தொடர்பு:14:29 (05/01/2019)

டார்க் மோடு, மீடியா ப்ரிவ்யூ... வரப்போகும் வாட்ஸ்அப்பின் ஸ்பெஷல் அப்டேட்ஸ்!

பயனர்களுக்காக என்னென்ன சர்பரைஸ்களை வைத்திருக்கிறது வாட்ஸ்அப்?

டார்க் மோடு, மீடியா ப்ரிவ்யூ... வரப்போகும் வாட்ஸ்அப்பின் ஸ்பெஷல் அப்டேட்ஸ்!

றிமுகம் செய்யப்பட்டதிலிருந்து ஒவ்வொரு வருடமும் மெருகேறிக்கொண்டே வருகிறது வாட்ஸ்அப். கடந்த வருடம் PiP mode, ஸ்டிக்கர், ஃபார்வர்டு மெசேஜ்களுக்கு கட்டுப்பாடு என பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டன. அதே போல இந்த வருடமும் வாட்ஸ்அப்பில் புதிய வசதிகள் இணையக் காத்திருக்கின்றன. இந்த வருடத்தில் என்னென்ன புதிய வசதிகளை வாட்ஸ்அப்பில் எதிர்பார்க்கலாம் ?

டார்க் மோடு

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசதிகளில் இதுவும் ஒன்று. டார்க் மோடு வசதி ஏற்கெனவே பல ஆப்களில் இருக்கிறது. இதன் மூலமாக வாட்ஸ்அப்பின் நீண்டகால அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் வெள்ளை பேக்கிரவுண்டை கறுப்பு நிறத்துக்கு மாற்றிக் கொள்ள முடியும். டார்க் மோடு மூலமாக இரவில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது கண்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும். இது தவிர மேலும் ஒரு பயனையும் இதன் மூலமாகப் பெற முடியும். OLED டிஸ்ப்ளேவைக் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு இதனால் பேட்டரி பேக்அப் அதிகமாகும். கடந்த வருடமே அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தரப்படவில்லை. இந்த மாதமே இந்த வசதி கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

Consecutive Voice Message 

Consecutive Voice Message 

நீண்ட காலமாக எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் இருப்பது வாய்ஸ் மெசேஜ் ஆப்ஷன்தான். தற்பொழுது எத்தனை மெசேஜ் என்றாலும் அதை ஒவ்வொன்றாக ப்ளே செய்து கேட்க வேண்டியிருக்கும். இந்த வசதி கொடுக்கப்பட்டால் இனிமேல் அதற்கான தேவை இருக்காது. ஒவ்வொரு வாய்ஸ் மெசேஜும் முடிவடையும் போது அடுத்த மெசேஜ் தானாகவே ப்ளே ஆகும். எடுத்துக்காட்டாகத் தொடர்ச்சியாக ஐந்து மெசேஜ்கள் வந்தால் முதலில் இருப்பதை ப்ளே செய்தாலே போதுமானதாக இருக்கும். இந்த வசதி ஐஒஸ் v2.18.100 பீட்டா பதிப்பில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. எனவே கூடிய விரைவில் ஆண்ட்ராய்டுக்கும் கொடுக்கப்படலாம்.

Video Preview 

Video Preview 

வாட்ஸ்அப்பில் கடந்த வருடம் பிக்சர் இன் பிக்சர் மோடு அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வீடியோ ப்ரிவியூ தற்பொழுது அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலமாக புஷ் நோட்டிஃபிகேஷன்களில் வாட்ஸ்அப்பில் வரும் வீடியோக்களை ப்ரிவியூவாகப் பார்க்க முடியும். தற்பொழுது GIF, மற்றும் போட்டோக்களை ப்ரிவியூவாகப் பார்க்க முடியும். இந்த வசதி கொடுக்கப்பட்டால் வீடியோக்களையும் வாட்ஸ்அப்பின் உள்ளே சென்று பார்க்காமலேயே அது என்ன வீடியோ என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Sticker Search 

வாட்ஸ்அப் பயனாளர்களால் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட வசதிகளில் ஒன்று ஸ்டிக்கர்கள். அதைக் கடந்த வருடம் அறிமுகம் செய்தது வாட்ஸ்அப். தற்பொழுது நாம் உருவாக்கிய அல்லது, அதில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை மட்டும்தான் பயன்படுத்த முடியும். ஆனால் விருப்பப்பட்ட ஸ்டிக்கர்களை தற்பொழுது தேட முடியாது. அதற்காக ஸ்டிக்கர் சர்ச் வசதி மிக விரைவில் கொடுக்கப்படவுள்ளது. இதன் மூலமாக வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் பயன்பாடு அதிகமாகலாம்.

Fingerprint lock

Fingerprint lock

இன்றைக்கு பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் இருக்கிறது. அதை வைத்துத்தான் பலர் மொபைலை அன்லாக் செய்கிறார்கள். அதை வைத்து வாட்ஸ்அப்பின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கான ஆப்ஷன் கூடிய விரைவில் கொடுக்கப்படலாம். இதைப் பயன்படுத்துவதன் மூலமாக ஒவ்வொரு முறையும் வாட்ஸ்அப்பிற்குள் நுழையும் முன்னர் ஃபிங்கர்பிரின்ட் மூலமாக அனுமதி அளிக்க வேண்டியிருக்கும். அதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் பாஸ்வேர்டு தேவைப்படும் வகையில் இந்த வசதி வடிவமைக்கப்படலாம். இதன் மூலமாக வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி தற்பொழுது பரிசோதனை நிலையிலே இருந்து வருகிறது. இது தற்பொழுது ஐஒஸ் பதிப்பில் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது வெற்றிபெறும் பட்சத்தில் முதலில் ஐஒஎஸ் இயங்குதளத்துக்கும் அதன் பின்னர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்