Mi A2 ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாகக் குறைத்த ஷியோமி! | Xiaomi Mi A2 smartphone price reduced

வெளியிடப்பட்ட நேரம்: 07:25 (08/01/2019)

கடைசி தொடர்பு:08:35 (08/01/2019)

Mi A2 ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாகக் குறைத்த ஷியோமி!

ஷியோமி

20,000 ரூபாய்க்குக் கீழ் சந்தையில் கிடைக்கும் சிறந்த போன்களில் ஒன்றான Mi A2 ஸ்மார்ட்போனின் விலையைக் குறைத்திருக்கிறது ஷியோமி நிறுவனம். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்த ஸ்மார்ட்போன், கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் என்ற திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இது, சந்தையில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை 4GB+64GB வேரியன்ட் 16,999 ரூபாய் மற்றும் 6GB+128GB வேரியன்ட்டின் விலை 19,999 ரூபாய்.

இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 4GB+64GB வேரியன்ட் 13,999 ரூபாய்க்கும், 6GB+128GB வேரியன்ட் 15,999 ரூபாய்க்கும் கிடைக்கும். ஆன்லைன் மட்டுமின்றி mi ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இதே விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும். ஏற்கெனவே, ஷியோமியின் ரெட்மி நோட் 6 புரோ ஸ்மார்ட்போன் இதே விலைக்குக் கிடைக்கிறது. ஆனால், இதே விலையில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது, இதில் இருக்கும் கேமரா சிறந்ததாக இருக்கும். இந்த போனின் தொடர்ச்சியாக Mi A3 ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் ஷியோமி அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன் காரணமாகவே இந்த விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.