``இந்திய வாட்ஸ்அப் குரூப்களில் அதிகமாகப் பரவும் சிறார் ஆபாசப்படங்கள்’’ - பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு | Indian WhatsApp groups share adult content on children, reports internet security probe

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (08/01/2019)

கடைசி தொடர்பு:16:00 (08/01/2019)

``இந்திய வாட்ஸ்அப் குரூப்களில் அதிகமாகப் பரவும் சிறார் ஆபாசப்படங்கள்’’ - பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு

பிரபல தகவல்தொடர்பு சேவையான வாட்ஸ்அப்பில் சிறார் ஆபாசப்படங்கள் பகிரப்படுவதாகவும், அதைப் பகிரும் குரூப்களில் பலர் இந்தியர்கள் என்றும் தெரிவித்துள்ளது இஸ்ரேலிய இணையப் பாதுகாப்பு ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஆன்டி-டாக்ஸின் டெக். டிசம்பர் மாதம் பப்ளிக் வாட்ஸ்அப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட பிறகு, இதைத் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

வாட்ஸ்அப்

இவை அனைத்தும் நடைபெறும் சேவையான வாட்ஸ்அப் end-to-encryption பின் மறைந்துகொள்வதாகக் குற்றம்சாட்டியுள்ளது அந்நிறுவனம். வாட்ஸ்அப்பின் இந்த முறையின் மூலம் அனுப்புவர் மற்றும் பெறுபவரை தவிர யாராலும் அனுப்பப்படும் செய்திகளை பெறமுடியாது. ஏன் வாட்ஸ்அப் நிறுவனமே நினைத்தாலும் இவற்றைப் பார்க்கமுடியாது. இதனால்தான் இதைப்போன்ற தவறான விஷயங்கள் வாட்ஸ்அப்பில் நிகழ்வதாகத் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம். ஆனால், வாட்ஸ்அப்பின் முக்கிய வசதியே அதுதான், ஏற்கெனவே வதந்திகள் மற்றும் போலிச் செய்திகள் பரவக் காரணமாக இருக்கிறது என்று இந்திய அரசால் கண்டிக்கப்பட்டது வாட்ஸ்அப். சிறார் ஆபாசப்படங்கள் தயாரிப்பதும், பகிர்வதும், பார்ப்பதும் பெரும்பாலான நாடுகளில் மிகப்பெரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Group

2016 இறுதியில் குரூப்பில் லிங்க் மூலம் இணையும் வசதியை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப். இதன்மூலம் யார் வேண்டுமானாலும் ஒரு லிங்க் மூலமே ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைய முடியும். இது குரூப்களை கண்டறிவதற்கும் பகிர்ந்துகொள்ளவும் எளிதான வழிகளை அமைத்துத் தந்தது குறிப்பிடத்தக்கது. இந்த லிங்க்குகளை ஷேர் செய்யும் ஆப்கள் மற்றும் தளங்களின் வழியாக இவற்றைக் கண்டறிந்த ஆய்வு நிறுவனம். இவற்றில் பல எண்கள் +91 என்ற ISD code-உடன் இருப்பதைக் கவனித்துள்ளது. இதன்மூலமே இந்தியர்கள் இதில் அதிகம் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதைப் போன்ற ஆப்களை முடிந்தளவு தங்கள் பிளே ஸ்டோரிலிருந்து டெலீட் செய்து வருகிறது கூகுள்.

செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவரின் டிஸ்பிளே புகைப்படத்தைக் கொண்டே ஆபத்தான கணக்குகளைக் களையெடுத்துவருவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளபோதும் 300 பேரை மட்டுமே கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தால் எப்படி இத்தனை 150 கோடி கணக்குகளைக் கண்காணிக்க முடியும் என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை என்கின்றன டெக் பாதுகாப்பு நிறுவனங்கள். அரசும் புதிய நெறிமுறைகள் கொண்டுவரும் நோக்கில்தான் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க