`ஸ்ட்ரீமிங் தளங்களில் இனி பாஸ்வேர்டுகளை பகிர முடியாதா?' - வருகிறது புதிய தொழில்நுட்பம் | New AI software to find sharing of streaming accounts

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (10/01/2019)

கடைசி தொடர்பு:22:30 (10/01/2019)

`ஸ்ட்ரீமிங் தளங்களில் இனி பாஸ்வேர்டுகளை பகிர முடியாதா?' - வருகிறது புதிய தொழில்நுட்பம்

நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒரு கணக்கை பெற்றுவிட்டு அதைப் பலரும் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இன்னும் சில நாள்களில் இது கடினமான ஒன்றாக மாறிவிடும். இதைப்போன்ற பகிர்வுகளைத் தடுக்க புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தற்போது நடந்துவரும் Consumer Electronic Show 2019 விழாவில் அறிமுகப்படுத்தியது Synamedia என்னும் வீடியோ தளங்களுக்கு மென்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம்.

ஸ்ட்ரீமிங்

சமீபத்தில் நடந்த சர்வே ஒன்றில் 26 சதவிகித பயன்பாட்டாளர்கள் தங்கள் ஸ்ட்ரீமிங் கணக்குகளுக்கான பாஸ்வேர்டுகளை நண்பர்களுக்கும் பகிர்வதாகத் தெரியவந்தது. இந்த மென்பொருள் இதைத் தடுக்க பயன்பாட்டாளர் பார்க்கும் வீடியோ ஹிஸ்டரி, எந்த எந்த சாதனங்கள் லாக் இன் ஆகியிருக்கிறது போன்ற பல தகவல்களை எடுத்துக்கொண்டு இப்படிப் பகிரப்படும் கணக்குகளைக் கண்டறியும்.

நெட்ஃப்ளிக்ஸ்

இந்தப் பகிர்தல்களால் 2021-ல் சுமார் 1,000 கோடி டாலர்கள் வரை இந்த ஸ்ட்ரீமிங் சந்தையில் நஷ்டம் ஏற்படும் என்று ஒரு ஆய்வு தெரிவித்தது. இந்தப் புதிய மென்பொருளை நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் வருங்காலத்தில் ஸ்ட்ரீமிங் கணக்குகளை பகிர்வதில் பல கட்டுப்பாடுகள் வரும் என்கின்றன டெக் வட்டாரங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க