2018-ல் ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா? | Do you know the income of Apple CEO Tim Cook for the year 2018?

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (11/01/2019)

கடைசி தொடர்பு:15:30 (11/01/2019)

2018-ல் ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

பிரபல டெக் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக்கின் 2018-ன்  வருமானம் என்ன என்கிற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்க்கையில் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் இந்தத் தொகை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

டிம் குக்

எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து போனஸ் மட்டும் 12 மில்லியன் டாலர்கள் பெற்றுள்ளார் அவர். கடந்த வருடம் 9.3 மில்லியன் டாலர்களைப் போனஸாக பெற்றார். கடந்த வருடம் விற்பனையில் இவர் ஏற்படுத்திய முன்னேற்றத்துக்காக இது கொடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. மேலும், அவரது சம்பளத்தையும் இந்த வருடம் 22 சதவிகிதம் உயர்த்தியுள்ளது ஆப்பிள். இது போகப்போக இவர் வைத்திருக்கும் பங்குகளிலிருந்து 121 மில்லியன் டாலர்கள் வருமானம் பெற்றுள்ளார். மேலும், பிரைவேட் ட்ராவல் மற்றும் செக்யூரிட்டி அலவன்ஸ் என 6,82,000 டாலர்கள் பெற்றுள்ளார் இவர். 

ஆப்பிள்

மொத்தமாக சுமார் 136 மில்லியன் டாலர்களை 2018-ல் மட்டும் சம்பாதித்துள்ளார் டிம். இது இந்திய ரூபாய் கணக்கில் 960 கோடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் இதேபோன்று ஆப்பிளுக்கும் டிம்மிற்கும் அமைவது கடினம்தான் என்றும் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க