`எங்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்!’ - டெலிகாம் நிறுவனத்தை வறுத்தெடுத்த நடிகை | Why cheat us like this, actress questions telecom company

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (13/01/2019)

கடைசி தொடர்பு:14:00 (13/01/2019)

`எங்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்!’ - டெலிகாம் நிறுவனத்தை வறுத்தெடுத்த நடிகை

பிரபல பாலிவுட் நடிகையான டாப்ஸி பன்னு சரியாக சிக்னல்கள் கிடைப்பதில்லை என்றும் அதிக விலை வைத்து ஏமாற்றுவதாகவும் டெலிகாம் நிறுவனமான வோடஃபோனை கடுமையாக ட்விட்டரில் சாடியுள்ளார்.

Taapsee

அவர் `வோடஃபோன் தங்கள் சேவையை நிறுத்திவிட்டுக் கிளம்பும் நேரம் வந்துவிட்டது, அல்லது அவர்கள் அதிக விலை வைப்பதை நிறுத்தவேண்டும். சிக்னல்கள் எங்கும் கிடைக்காத நிலையை மாற்ற வேண்டும். நாம் இப்போது போன்களை அதிக அளவு சார்ந்திருப்பதால் எப்படியெல்லாம் வாடிக்கையாளராகிய நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது." என்று ட்விட்டரில் பதிவிட்டார்.

வோடஃபோன் டெலிகாம்

இது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் விரைவில் தங்கள் குழு தொடர்புகொண்டு பிரச்சனையை தீர்க்கும் என்று பதிலளித்தது வோடஃபோன் நிறுவனம். இந்த ட்வீட்டுக்கு கீழே மக்கள் பலரும் தாங்களும் இதைப் போன்று பாதிக்கப்பட்டதாக தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தனர். பலர் மற்ற நிறுவனங்களையும் டேக் செய்து பிரச்னைகளை பதிவிட்டனர். சமீபத்தில்தான் வோடஃபோன் மற்றும் ஏர்டெல் இன்கமிங் சேவைக்கும் வேலிடிட்டி பேக் மூலம் ரீசார்ஜ் செய்யவேண்டும் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க