``மாஸ் டிசைன்... மரண மாஸ் Bass!" - ஆடியோ சந்தையில் கால்பதிக்கும் ஷியோமி #MiSoundBar | Xiaomi launches new Sound-bar and enters Audio market in style

வெளியிடப்பட்ட நேரம்: 03:04 (14/01/2019)

கடைசி தொடர்பு:10:56 (14/01/2019)

``மாஸ் டிசைன்... மரண மாஸ் Bass!" - ஆடியோ சந்தையில் கால்பதிக்கும் ஷியோமி #MiSoundBar

ஷியோமியின் முதல் ஆடியோ சாதனமான புதிய Mi சவுண்ட்பாரில் என்னவெல்லாம் இருக்கிறது?

``மாஸ் டிசைன்... மரண மாஸ் Bass!

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே அனைவரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியுள்ளது ஷியோமி. கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு புதிய டிவிகள், ஒரு புதிய சவுண்டு பாருடன் இந்த வருடத்தைத் தொடங்கியுள்ளது ஷியோமி நிறுவனம். இந்த சவுண்ட்பார் மூலம் JBL, சோனி, பிலிப்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் போட்டிபோடும் ஆடியோ சந்தையிலும் முதல்முதலாகக் கால்பதித்துள்ளது ஷியோமி. இந்த சவுண்ட்பாரில் என்னென்ன வசதிகள் இருக்கிறதெனப் பார்ப்போம்.

ஷியோமி soundbar

டிசைன்

ஷியோமி முந்தைய சாதனங்களான ஏர் ஃபில்டர், செக்யூரிட்டி கேமரா போன்ற டிசைனில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த சவுண்ட்பார். 83 சென்டிமீட்டர் நீளமுள்ள இதன் முன்பக்கம் fabric ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் மட்டும் வெளிவந்துள்ளது இது. கிட்டத்தட்ட அனைத்து டிவிகளுடனும் பொருந்திப் போகிறது இதன் டிசைன். இருப்பினும் கறுப்பு வண்ணத்திலும் ஒன்றை வெளியிட்டு இருக்கலாமே பாஸ் என்கின்றனர் ரசிகர்கள். ஷியோமியின் Mi டிவிகள் கறுப்பு நிறத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை டேபிள் மீதும் வைக்கலாம், சுவரில் வால் மவுண்டும் செய்யலாம். அதற்கேற்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

8 units

டெக் ஸ்பெக்ஸ்

டெக்னிகளாகப் பார்த்தால் இதனுள் மொத்தம் 8 யூனிட்டுகள் இருக்கின்றன. இரண்டு பேஸ் (Bass) யூனிட்கள், பி இரண்டு dome treble யூனிட்கள்,  நான்கு பாஸ்ஸிவ் ரேடியேட்டர்கள் உள்ளன. இதில் 2 பேஸ் யூனிட்கள் அதிர்வுகளை உணரவைக்கும் பேஸ் சத்தத்தையும், dome treble யூனிட்கள் கண்ணாடி உடைவது போன்ற treble சத்தத்தையும் தரும். இதனால் தனியாக வூஃபர் எதுவும் இல்லாமலேயே இதன் பேஸ் சத்தம் சிறப்பாக இருக்கும் என்கிறது. மற்ற யூனிட்கள்  வசன உச்சரிப்பு போன்றவற்றில் தெளிவைக் கொண்டுவந்து ஒரு துல்லியமான சினிமா அனுபவத்தைத் தரும் என்கிறது ஷியோமி. 

Input/Output

இன்புட்/ஓவுட்புட்

ப்ளூடூத் மூலம் இதை உங்கள் மொபைலில் கூட கனெக்ட் செய்யமுடியும். இதுபோக சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தும் 3.5 AUX இன்புட், ஃபைபர் ஆப்டிக் இன்புட், co-axial இன்புட் மற்றும் சிவப்பு, மஞ்சள் ஆடியோ இன்புட் எனக் கிட்டத்தட்ட அனைத்து இன்புட் வசதிகளும் இருக்கிறது இதில். HDMI மட்டும் இல்லை.

இதன் விலை 4,999 ரூபாய் என நிர்ணயித்துள்ளது ஷியோமி. இந்த விலையில் இதற்குப் போட்டியாளர் எனச் சொல்லிக்கொள்வதற்கு ஒரு பெரிய நிறுவனத்தின் சவுண்ட் பார் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிமோட் இல்லை, HDMI மற்றும் முன்னணி encoding சப்போர்ட் போன்ற விஷயங்கள் இல்லையென்றாலும் கொடுக்கும் விலைக்குச் சிறந்த பொருளாக இது இருக்குமென நம்பிக்கை தெரிவிக்கின்றன டெக் வட்டாரங்கள். Mi டிவிகள் போன்று இதுவும் விற்பனையில் சாதிக்குமா, ஆடியோ சந்தையிலும் ஷியோமி ஆழ கால்பதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது வரும் 16-ம் தேதி 12 மணிக்கு விற்பனைக்கு வரும்.

புதிய Mi டிவிகள்

மேலும் Mi TV 4X Pro 55-inch, Mi TV 4A Pro 43-inch ஆகிய இரண்டு புதிய டிவிகளையும் இத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது ஷியோமி. ஏற்கெனவே இருக்கும் இந்த சைஸ் டிவிகளில் சில சிறிய பட்டி டிங்கரிங் மட்டும் பார்த்து இவற்றை வெளியிட்டுள்ளது ஷியோமி. அதே ஆண்ட்ராய்டு டிவி, பேட்ச் வால் என மென்பொருளில் அதே பாய்ச்சலுடன் வரும் இவை. மக்கள் எதிர்பார்க்கும் அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் சப்போர்ட் இதிலும் இல்லை. 4X Pro 55-inch 4K 10-bit டிவியாகவும், 4A Pro 43-inch Full HD டிவியாகவும் வெளிவரும்.

இவை இரண்டும் வரும் 15-ம் தேதி ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் விற்பனைக்கு வரும். 4X Pro 55-inch 39,999 ரூபாயிலும், 4A Pro 43-inch 22,999 ரூபாயிலும் விற்கப்படும். ஷியோமியின் நியூ இயர் வரவுகளுக்கு மக்கள் கொடுக்கப்போகும் ரிசல்ட் என்ன என்பது பொங்கல் விடுமுறை முதல் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்