ஷியோமியைச் சமாளிக்கப் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் சாம்சங்! | samsung will introduce new smartphone series soon

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/01/2019)

கடைசி தொடர்பு:06:00 (15/01/2019)

ஷியோமியைச் சமாளிக்கப் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் சாம்சங்!

சாம்சங்

இந்திய மொபைல் சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கும் வகையில் புதிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியாவில் சீன மொபைல் நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு போட்டி அதிகரித்துள்ளது. குறிப்பாக ஷியோமி நிறுவனம் குறுகிய கால கட்டத்திலேயே சந்தையில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதனால் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வந்த சாம்சங் நிறுவனம் அந்த இடத்தை இழந்தது. தற்பொழுது ஷியோமி நிறுவனமே ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது. 

ஷியோமி

இந்நிலையில் போட்டியைச் சமாளிக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M என்ற புதிய சீரிஸின் கீழ் இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. வரும் 28-ம் தேதி கேலக்ஸி M10, M20 மற்றும் M30 என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்போன்களில் பேட்டரி, டிஸ்ப்ளே போன்ற வசதிகள் சிறப்பாக இருப்பதால்தான் பலரும் அதை வாங்க விரும்புகிறார்கள். 

எனவே அதற்கேற்றவாறு இந்த கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் பெரிய பேட்டரி, சிறப்பான திரை போன்றவற்றைக் கொண்டிருக்கும். அமேசான் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன.