`அடுத்த வருடம் விண்டோஸ் 7-க்கான ஆதரவு நிறுத்தப்படும்' - மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு | Microsoft says Support for Windows 7 is end in next year

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (17/01/2019)

கடைசி தொடர்பு:05:00 (17/01/2019)

`அடுத்த வருடம் விண்டோஸ் 7-க்கான ஆதரவு நிறுத்தப்படும்' - மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் 7 இயங்குதளத்துக்கான ஆதரவை நிறுத்தப்போவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட்

விண்டோஸ் 7 இயங்குதளம் 2009-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வருடத்தோடு 10 வருடத்தை நிறைவு செய்யப்போகிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும்கூட இன்றைக்கும் பலருக்கும் பிடித்த இயங்குதளங்களில் ஒன்றாக இது இருந்து வருகிறது. இந்நிலையில்தான் இதற்கான ஆதரவை நிறுத்தும் முடிவை எடுத்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். 'அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரத்தான் வேண்டும், அது விண்டோஸ் 7-னாக இருந்தாலும்கூட.

2020 ஆண்டு ஜனவரி 14-ம் தேதிக்குப் பிறகு, விண்டோஸ் 7-ல் இயங்கும் கணினிகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் மற்றும் பிற ஆதரவுகளை மைக்ரோசாஃப்ட் வழங்காது. எனவே, நீங்கள் விண்டோஸ் 10-க்கு அப்டேட் செய்து கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மைக்ரோசாஃப்ட்டின் இந்த முடிவால் விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் இயக்கத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்கப் போவதில்லை. அதே வேளையில் பாதுகாப்பு விஷயங்களில் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. 10 வருடங்களுக்குப் பிறகும்கூட இயங்குதள சந்தையில் 36.9 சதவிகித இடத்தை விண்டோஸ் 7 கையில் வைத்திருக்கிறது.