"நாங்க இல்லாம ஐபோனா?"... ஆப்பிளைச் சீண்டும் குவால்காம் | Qualcomm says iPhone wouldn’t exist without its technology

வெளியிடப்பட்ட நேரம்: 06:19 (17/01/2019)

கடைசி தொடர்பு:06:19 (17/01/2019)

"நாங்க இல்லாம ஐபோனா?"... ஆப்பிளைச் சீண்டும் குவால்காம்

 

குவால்காம் 

உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பாளர்களில் ஒன்றான ஆப்பிளுக்கும், புராஸசர் சந்தையில் முன்னிலையில் இருக்கும் குவால்காம் நிறுவனத்துக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்திருக்கிறது. காப்புரிமை தொடர்பாக இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே பல காலமாக மோதல் நீடித்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் அது தயாரித்து வரும் ஐபோன்களுக்கான மோடம்களை கொடுத்து வந்த குவால்காம் நிறுவனம் மீது நம்பிக்கையின்மை வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது. இந்த வழக்கு அமெரிக்கன் பெடரல் டிரேட் கமிஷனில் நடந்து வருகிறது.

ஆப்பிள்

இது தொடர்பான நடைபெற்ற விவாதங்களின் விவரங்கள் தற்பொழுது வெளியாகியிருக்கின்றன. அதன்படி எங்களின் தொழில்நுட்பம் இல்லாமல் ஐபோன்களை யோசித்துக் கூட பார்க்க முடியாது என குவால்காம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நாங்கள் யாரையும் எங்கள் சிப்களை வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதில்லை. காப்புரிமைகளை உரிமம் பெற்றுக் கொண்டு அவர்களாகவே சிப்களை உருவாக்கிக் கொள்ள பரிந்துரைக்கிறோம்". என குவால்காம் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

ஆப்பிள்

இந்த வழக்கில் யாருக்குச் சாதகமாக தீர்ப்பு வரும் என்பது இனிமேல்தான் தெரியவரும். மேலும் கடந்த வருடம் வெளியான ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR ஆகிய ஸ்மார்ட்போன்களில் குவால்காமின் மோடம்களை பயன்படுத்த விரும்பியதாகவும் , ஆனால் ஆப்பிளின் கோரிக்கையை குவால்காம் நிராகரித்து விட்டது எனவும் ஆப்பிள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.