`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்! | Google buys this smartwatch brand for 40 million dollars

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (19/01/2019)

கடைசி தொடர்பு:08:37 (19/01/2019)

`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்!

புதிய ஸ்மார்ட் வாட்ச் தொழில்நுட்பம் ஒன்றை 40 மில்லியன் டாலர் செலவில் ஃபாசில் நிறுவனத்திடமிருந்து வாங்க முடிவு செய்துள்ளது கூகுள். அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேஷன் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாசில் உலக அளவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று.

கூகுள்


இந்த நிறுவனம் தற்பொழுது கூகுளின் Wear OS என்ற இயங்குளத்தைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைத் தற்போது விற்பனை செய்து வருகிறது. இந்த வாட்ச்கள் சந்தையில் ஆப்பிளின் ஐ வாட்ச்சுக்குப் போட்டியாக இருக்கின்றன. எனவே இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தைக் கூகுளுக்கு வழங்குவற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி தொழில்நுட்பம் மட்டுமின்றி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவைச் சேர்ந்த ஒரு பகுதியினரும் கூகுள் நிறுவனத்துடன் இணைவார்கள் என ஃபாசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபாசில்

கூகுள் வாங்கியிருக்கும் புதிய தொழில்நுட்பமானது இதுவரை சந்தைக்கு வந்த எந்த ஸ்மார்வாட்ச்களிலும் பயன்பாட்டில் இல்லாத ஒன்று எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தம் மூலமாகக் கூகுள் நிறுவனம் கூடிய விரைவில் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.